நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 September, 2023 3:40 PM IST
a good news for rabbit farm house owner

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி ஆராய்ச்சி மையம் - நுண்ணுயிரி தடுப்பூசி கால்நடை நலக்கல்வி மையத்தின் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்வாக முயல் நலம் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து முயல் பண்ணையாளர் திருவிழா நடைப்பெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதிலும் சந்தை வாய்ப்புகள் கூடிய முயல் வளர்ப்பு திட்டத்தில் பங்கேற்று முயல் வளர்ப்பு பற்றி கற்றுக் கொண்டு, முயல் வளர்ப்பு தொடர்பான வல்லுநர்களுடன் கலந்துரையாடி, பயன்பெறுவதற்கான ஓர் அரிய வாய்ப்பாக இந்த நிகழ்வு இருக்கும் என கருதப்படுகிறது.

  • இதில், முயல் பண்ணையாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
  • இதற்கான பதிவு கட்டணம், நபர் ஒருவருக்கு ரூபாய் 500/- மட்டுமே.
  • முயல் பண்ணையாளர்கள் பயன்பாட்டிற்காக, முயல்களுக்கு ஏற்படும் நோய்க்கான தடுப்பூசி திருவிழாவில் வெளியிடப்படும்.
  • விருப்பமுள்ள பண்ணையாளர்களுக்கு இத்தடுப்பூசி விலையில்லாமல் வழங்கப்படும்.

வருகிற 22 ஆம் தேதி நடைப்பெற உள்ள இந்த கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவு செய்ய கடைசி நாள் 15.09.2023. இந்த கருத்தரங்கில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. முன்பதிவு செய்ய நபர் ஒன்றுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின்னணு முறையில் வங்கிப் பணப் பரிமாற்றம் செய்ய:

  • வங்கிக் கணக்கின் பெயர் : DIrector, CAHS
  • வங்கி கணக்கு எண்: 33290201099080
  • வங்கியின் பெயர்: Union bank of India
  • வங்கியின் கிளை: மாதவரம், சென்னை- 600 110
  • IFSC code: UBIN0533297
  • Gpay number: 9444222615

கருத்தரங்கு நிகழ்வானது சென்னையில் மாதவரம் பால் பண்ணை பகுதியிலுள்ள உழவர் இல்லத்தின் மாநாட்டுக் கூடத்தில் நடைப்பெற உள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வானது மாலை 5 மணி வரை நடைப்பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்தரங்கு நிகழ்வில் இடம்பெறும் விவாத தலைப்புகள் விவரம் பின்வருமாறு-

  • முயல் வளர்ப்புக் கொட்கை மற்றும் தீவனம் அளித்தல்- முனைவர் பா.ராஜேஷ்குமார்.
  • முயல்களில் ஏற்படும் இனப்பெருக்க மேலாண்மை- முனைவர் ரா.ராஜேந்திரன்
  • முயல்களில் ஏற்படும் முக்கிய நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்- முனைவர். சீ.மனோகரன்
  • முயல்களைத் தாக்கும் ஒட்டுண்ணி நோய்களும் மற்றும் தடுப்பு முறைகளும்- முனைவர் சி. சௌந்தரராஜன்

முயல் நலம் மற்றும் பராமரிப்பு முறைகள் தொடர்பான கருத்தரங்கு குறித்து மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொடர்பு எண்ணினை தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9444222615, 9442491436. அரசு கல்லூரி மூலம் நடைப்பெறும் இக்கருத்தரங்கின் முடிவில் சான்றிதழ்களும் வழங்கப்படுவதால் திரளான முயல் பண்ணையாளர்கள் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் காண்க:

உச்சி கொம்பு ஏறியது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம்?

இன்று 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை- உங்கள் மாவட்டமும் இருக்கா?

English Summary: a good news for rabbit farm house owner
Published on: 02 September 2023, 03:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now