கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வேலம்மாவலசு கிராமத்தில் வருகின்ற 18.08.2023 அன்று மாபெரும் கால்நடை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி, வேலம்மாவலசு கிராமத்தில் 18.08.2023 அன்று கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியோர் ஒன்றிணைந்து நடத்தும் மாபெரும் கால்நடை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், செயற்கைமுறை கரூவூட்டல், சினை ஆய்வு, சினை பருவ ஒருங்கிணைப்பு, மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள், புற ஒட்டுண்ணிகள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கால்நடை நோய்புலானாய்வு பிரிவின் மூலம் கால்நடைகளுக்கான தோல் நோய்கள், சாணம், ரத்தம், சளி, பால் ஆகியவற்றை ஆய்வு செய்யப்படவுள்ளது.
மேலும் படிக்க: மீனவர்கள் மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!
எனவே வேலம்மாவலசு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமத்தில் வசிக்கும் கால்நடை வளர்ப்போர் முகாமிற்கு தங்களது கால்நடைகளை பெருமளவில் கொண்டு வந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த முகாம் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களால் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
தீவனப்பயிர்கள் சாகுபடி மற்றும் உயர் தொழில்நுட்பங்கள் குறித்து இலவசப் பயிற்சி