பிரபல நடிகர் ஒருவர், மாநில அரசின் சிறந்த விவசாயி விருதைப் பெற்று, மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த நடிகர் மாட்டுப்பண்ணை நடத்தி வருவதுடன், 60க்கும் மேற்பட்ட பசுக்களை வளர்த்து வருகிறார்.
ஆதரவு தொழில்
விவசாயம் கைகொடுக்காத காலகட்டத்தில், விவசாயிகளுக்கு உதவும் தொழில் என்றால் அதுதான் ஆடு, மாடு வளர்ப்பு. அதனால்தான் இதனை விவசாயத்தின் ஆதரவு தொழில் என்று கூறுகிறார்கள். அப்படி, கால்நடை வளர்ப்பைக் கையில் எடுத்துக்கொண்டு, பிரபல நடிகர் ஒருவர் சிறந்த விவசாயி விருது பெற்றிருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? அதிலும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்ததுடன், தமிழ் உள்ளிட்டப் பிற மொழிகளிலும், முத்திரை பதித்த திறமைசாலி இவர்.
விருது வழங்கியக அரசு
பிரபல மலையாள நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயி எனும் விருதை வழங்கி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கவுரவித்தார். திருவனந்தபுரம், கேரள மாநில விவசாய துறை சார்பில் திருவனந்தபுரத்தில் விவசாய தின விழா நடைபெற்றது.
60 பசுக்கள்
இந்த விழாவில் சிறந்த விவசாயி என்ற விருதினை நடிகர் ஜெயராமுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஜெயராமை கௌரவித்தார்.எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியில் ஆனந்த் பண்ணை என்ற பெயரில் 8 ஏக்கர் நிலத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக மாட்டு பண்ணையை நடத்தி வருகிறார். அறுபதுக்கும் மேற்பட்ட பசுக்களை தன் பண்ணையில் வளர்த்து வருகிறார். இவரது விவசாய பணிகளை பாராட்டி கேரள மாநில அரசு கவுரவித்துள்ளது.
மிகப்பெரிய கவுரவம்
விவசாயி விருது கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதனை பத்ம ஸ்ரீ விருதை விட உயரிய விருதாகக் கருதுகிறேன் என நடிகர் ஜெயராம் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!