தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் மனதிலும், என்றாவது ஒருநாள் முதலாளி ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இருப்பினும் அதற்கு ஏற்ற முயற்சியையும், கடின உழைப்பையும் கொடுக்க முன்வரும்போது நீங்களும் முதலாளியாக, சுயதொழில் செய்பவராக மாற முடியும்.
அதிலும் நகரங்களை விட கிராமப்புறத்தைச் சேர்ந்தவராக இருப்பின், இந்த தொழில் நிச்சயம் கை கொடுக்கும். குறைந்த அளவிலான உழைப்பைப் போட்டாலே போதும். இந்த தொழிலில் நல்ல லாபம் ஈட்டமுடியும். அதுதான் மாட்டுச்சாணத்தை மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றும் தொழில்.
கால்நடைகளுக்கான அவசர முதலுதவி சிகிச்சை முறைகள்!
கோழியினங்களுக்கான பாரம்பரிய மூலிகை முதலுதவி மருத்துவம்!!
காகிதம் தயாரிப்பு (Paper from cow dung)
மாட்டுச்சாணத்தில் இருந்து காகிதம் தயாரிக்கலாம் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே நீங்கள் மாடு வளர்ப்பராக இருப்பின், இந்த தொழிலைக் கையில் எடுத்துக்கொள்ளலாம்.
ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சாணத்தில் இருந்து காகிதங்களைத் தயாரிப்பதில் அண்மையில் சாதனை படைத்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள குமரப்பா தேசிய காகித தயாரிப்பு கல்வி நிறுவனம், மட்ட ரகக் காகிதத்தில், மாட்டுச்சாணத்தைக் கலந்து manmade காகிதங்களை தயாரித்துள்ளது. இதற்கு ஏற்ப காகித ஆலையை நிறுவ குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை முதலீடு அவசியம்.
இயற்கை சாயம் (Vegetable Dye)
உங்களிடம் உள்ள சாணத்தில், வெறும் 7 சதவீத மாட்டுச் சாணத்தைக் கொண்டு காகிதங்களைத் தயாரிக்கலாம். எஞ்சிய 93 சதவீத மாட்டுச்சாணத்தைப் பயன்படுத்தி இயற்கை சாயங்களை உற்பத்தி செய்யலாம்.
பருத்தி ஆடைகளுக்கு பயன்படுத்தப்படும், ரசாயனக் கலப்பில்லாத சாயம் எதுவென்றால், இந்த இயற்கை சாயம்தான்.
5 ஆயிரம் கால்நடைகளுக்கு காப்பீடு!- பயன் பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அழைப்பு!
நல்ல சத்தான கோழி வளர்ப்பு - அருமையான தீவனங்கள்!
''ஏழைகளின் பசு'' என்று அழைக்கப்படும் வெள்ளாடு வளர்பின் நன்மைகள்!
இயற்கை சாயம் தயாரிப்பு
மாட்டுச்சாணத்தை தண்ணீரில் கலந்து, அதில் பருத்தி துணியை முக்கி இரவு முழுவதும் சாயம் ஏற அனுமதிக்கலாம். இதன்மூலம் ரசாயனக் கலப்பிலாத முறையில் இயற்கை வண்ணம் பருத்தித் துணிக்கு கிடைக்கும்.
உலகம் முழுவதும் ரசாயனக் கலப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இயற்கை விவசாயம் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் நேரத்தில், இந்த தொழிலைத் தொடங்குவது நல்ல பலனைத் தரும். அனைத்து இடங்களிலும் இயற்கை சாயத்திற்கு அதிகளவில் தேவை உள்ளது.
அரசுக்கே விற்கலாம் (Selling Cow dung )
மாட்டுச்சாணமே லாபம் தரும் மற்றொரு தொழிலாகும். இதனை கிலோவிற்கு 5 ரூபாய் வீதம் அரசே வாங்கிக்கொள்கிறது. அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். காகிதம் தயாரிப்பதற்காக, ஒரு கிலோ மாட்டுச்சாணம் 5 ரூபாய் விதம், விலை கொடுத்து வாங்கப்படுகிறது.
எனவே அரசுக்கு மாட்டுச்சாணத்தை விற்பனை செய்து அதன் மூலம் ஈட்டும் வருவாயை, தங்களது மாத வருமானமாக மாற்றிக்கொண்டு விவசாயிகள் பலனடையலாம்.
மேலும் படிக்க...
பிரதமரின் விவசாயிகள் ஓய்வுதியத் திட்டதில் சேர என்ன செய்ய வேண்டும்- வழிமுறைகள் உங்களுக்காக!
எருமைப்பாலில் எத்தனை நன்மைகள்! - தெரியுமா உங்களுக்கு?
நண்பேன்டா! உழவனின் நல்ல நண்பனான மண்புழுவை, நண்பர்கள் தினத்தில் போற்றுவோம்!