Animal Husbandry

Wednesday, 07 August 2019 03:47 PM

Credit : Hobby Farms

பொதுவாக நாட்டு கோழிகளுக்கு பருவநிலை மாறும் போது "வெள்ளை கழிச்சல் நோய்" (White diarrhea disease) ஏற்படுகிறது. இந்த நோயானது ஒரு வித வைரஸின்  (Virus) மூலமாக பரவுகிறது. பனிக்காலத்தில் இருந்து வெயில் காலம் துவங்கும் ஃபிப்ரவரி மற்றும் கோடை காலத்தில் இருந்து மழை காலம் துவங்கும் ஜூன், ஜூலை போன்ற மாதங்களில், தோன்றுவது வழக்கம். இவ்வகை நோய்களை ஆரம்பத்திலே கண்டறிந்து அதற்கான மருந்தை கொடுக்கும் போது கோழியின் இறப்பை தவிர்க்க இயலும். நாட்டுக்கோழி வளர்ப்பில், கோழிகளைத் தாக்கும் நோய்களைத் தடுக்க வருமுன் காப்பதே சிறந்தது. இருப்பினும், நோய் வந்த பிறகு இயற்கை முறையைப் பின்பற்றி எளிதில் குணப்படுத்தலாம். இயற்கை முறை என்றுமே நமக்கு மிகச்சிறந்த முறையில் பலனளிக்கும்.

வெள்ளை கழிச்சல் நோயின் அறிகுறிகள்

  • கோழிகள் சோர்ந்து சுறுசுறுப்பின்றி உறங்கிய படியே இருக்கும்.
  • கோழிகள் உணவாக  இறையோ, தண்ணீரோ எடுக்காமல் பலவீனமாக காணப்படும்.
  • கோழிகளின் எச்சம் வெள்ளை நிறத்திலும், பச்சை நிறத்திலும் அதிக துர்நாற்றதுடன் வெளியேறும்.
  • கோழிகள் இறகுகள் சிலிர்த்து தலை பகுதி உடலுடன் சேர்த்தே இருக்கும்.

பாதிக்கப்பட்ட கோழிகளை கவனிக்கும் முறை

  • இந்நோயால் பாதிக்கப்பட்ட  கோழிகளை முதலில் தனியாக பிரித்து எடுத்து விட வேண்டும், இல்லையெனில்  கூண்டில் இருக்கும் அனைத்துக் கோழிகளுக்கும் பரவி விடும்.
  • கோழிகளின் வசிப்பிடம், கூடு மேலும் தீவனம் (Fodder) மற்றும்  நீர் வைய்க்கக் கூடிய பாத்திரங்கள் சுத்தமின்மையினாலும் (Impurity), வேற்றுக் கோழிகளுடன் கலப்பதனாலும் இவ்வாறான நோய்கள் பரவுவதற்கு காரணமாக அமைகின்றன.

இயற்கை மருத்துவம்

வெள்ளை கழிசல் நோய்களுக்கு நிவாரணியாக இதனை பின்பற்றலாம். நம் முன்னோர்கள் பயன் படுத்திய அருமருந்து, இன்றும் கிராமங்களில் இம்முறை வழக்கத்தில் இருந்து வருகிறது.

தேவையான பொருட்கள்

  1. பப்பாளி இலை
  2. வேப்ப இலை
  3. மஞ்சள் தூள்
  4. விளக் எண்ணெய்

பப்பாளி இலை (Papaya), வேப்ப இலை (Neem) மற்றும் சிறு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து விளக்கெண்ணெயில் குழைத்து வாரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.

மாற்று முறை:

ஒரு கோழிக்கு கொடுக்கும் மருந்து

  • கீழாநெல்லி செடி ஒரு முழுச் செடி (வேர் தண்டு இலை). இது கிடைக்காத பட்சத்தில் நாட்டு மருந்து கடைகளில் இதன் பொடி கிடைக்கும் 50 கிராம்
  • சின்ன வெங்காயம் 4 அல்லது 5
  • பூண்டு 2 அல்லது 3
  • சீரகம் 20 அல்லது 25 கிராம்
  • மிளகு 2
  • கட்டி மஞ்சள் 1 துண்டு தூளாக இருந்தால் 5 அல்லது 10 கிராம்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து அதை நல்லெண்ணெய் அல்லது நெய் அல்லது வேப்பெண்ணெய் (Neem oil) 3 செட்டு விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பெரிய கோழிகளுக்கு 4 சிறிய குஞ்சுகளுக்கு 2 அதன் வாயில் 3 அல்லது 5 நாட்கள் காலையும் மாலையும் போட்டு விடவும். இது மாதம் இருமுறை கொடுத்தால் மீண்டும் எந்த கோழிகளும் வராமல் தடுக்கலாம்.

அனைத்து வகை நோய்க்கும் ஏற்ற மருந்து 

பலருக்கும் தோன்றும் கேள்வி இது. எல்லா காலங்களிலும் கோழிகளை நோய் தொற்றிலிருந்து காக்கும் அருமருந்து என்றே கூறலாம் . மழைகாலம் மற்றும் வெயில் காலம் என அனைத்து காலங்களிலும் கொடுக்கலாம். அனைத்து வகையான நோய்களுக்கும் ஒரே நாட்டு மருந்து.

மருந்து தயாரிக்க தேவையான 7 பொருட்கள்

  1. துளசி இலை
  2. தூது வலை இலை
  3. கற்பூரவள்ளி இலை
  4. முல் முருங்கை இலை
  5. பப்பாளி இலை
  6. கொய்யா இலை
  7. வேப்ப இலை

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து இலைகளையும் ஒரே அளவாக எடுத்துக்கொண்டு அதனை நன்கு அரைத்து சிறு உருண்டைகளாக்கி 4 மாத கோழிகளுக்கு (0.75 g) என்ற அளவில் கொடுக்க வேண்டும்.

பின்குறிப்பு

எப்பொழுது எந்த மருந்து தேவைப்பட்டாலும் உடனுக்குடன் தயாரித்து பயன் படுத்தவும்.

Anitha Jegadeesan
Krishi Jagran 

மேலும் படிக்க

தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு 35 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது!

ரேஷன் கடையில் பனங்கருப்பட்டி வழங்க பரிசீலனை! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)