தாய்மையைக் கவுரவிக்கும் வகையில், கர்ப்பிணியானப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்திக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் அந்த கவுரவத்தை, பசுக்களுக்கும் அளித்து மரியாதை செலுத்தியுள்ளனர், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு கிராமத்தினர்.
தாய்மை (Motherhood)
பொதுவாக தாய்மை அடைந்த பெண், கர்ப்பத்தை உறுதி செய்த நாள் முதல், சுமார் 10 மாதங்கள் பல்வேறு சுகமான சுமைகளைத் தாங்கித் தனது மகவைப் பெற்றெடுக்க நேரிடும்.
பலவித இன்னல்கள் (Various tribulations)
குறிப்பாகப் அந்தப் 10 மாதங்களும், அவளது உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். என்ன இன்னலானாலும் சரி, எத்தனை இன்னலானாலும் சரி, அவை அத்தனையையும் தாங்கிக் கொள்ள வைப்பதுதான் தாய்மை.
நிகரே இல்லை
அதனால்தான் தாய்மைக்கு நிகரே இல்லை என்று பெருமைப்படுத்தப்படுகிறது. ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்றபோதிலும், தாய்மைதான் பெண்களுக்கு இந்த மண்ணில் பிறந்ததன் உன்னதத்தைப் பெற்றுத்தருகிறது.
பசுமாட்டுக்கு வளைகாப்பு (Baby shower for cows)
அந்த வகையில் புதுக்கோட்டையில் பசுமாட்டிற்கும் வளைகாப்பு நடத்தி மரியாதை செலுத்தி, தாய்மை விஷயத்தில் மனிதர்களும், பசுமாடும் ஒன்றுதான் என்று உணர்த்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மூங்கிதாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 48. இவர் பசு மாடு வளர்த்து வருகிறார்.
ஐஸ்வர்யா
இந்த பசு, நான்கு காளைக்கன்றுகள், ஒரு பசுங்கன்று ஈன்றது. பசுங்கன்றுக்கு ஐஸ்வர்யா என பெயரிட்டுள்ளனர். ஐஸ்வர்யா, தற்போது ஒன்பது மாத சினையாக உள்ளது.
உறவினர்களுக்கு அழைப்பு (Call to relatives)
இதைக் கொண்டாடும் வகையில், அண்ணாமலை குடும்பத்தார் அதற்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்து, உறவினர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
வளையல்களை மாட்டி (Trapped bracelets)
இதையடுத்து கோவிலில் வைத்து பசுவுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு,பட்டுத் துண்டு கட்டி, சுமங்கலிப் பெண்கள் வளையல்களைக் கொம்பில் மாட்டி வளைகாப்பு நடத்தினர்.
மேலும் படிக்க...
சினை ஆடுகளுக்கானத் தீவன மேலாண்மை!
கோழிகளுக்கு வெப்ப அயற்சியைத் தடுக்க குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும்! ஆராய்ச்சி நிலையம் தகவல்
பால் பண்ணை அமைக்க ரூ.1.75 லட்சம் மானியம்- மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!!