பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 30 March, 2021 10:18 AM IST
Credit: Oneindia Tamil

நல்லத் தரமான கன்றுகளை மாடுகள் பெற்றெடுக்க, நல்ல தீவனமும் முறையான கவனிப்பும் அவசியம்.

பலவீனமடைய வாய்ப்பு (Chance of weakening)

கன்றுகள் பிறப்பதற்கு முன்பிருந்தே நன்கு மாட்டை கவனித்தல் வேண்டும். அவ்வாறு கவனிக்கவில்லையெனில், கவனிப்பற்ற மாடுகள் ஈன்றெடுக்கும் கன்று உடல்மெலிந்து, பலவீனமானதாகக் காணப்படும்.

எனவே கன்று ஈனுவதற்கு 6 வாரங்களுக்கு முன்னிருந்தே, கவனிப்பும், பராமரிப்பும் மிக மிக அவசியமாகிறது.

பிறந்த கன்றின் கவனிப்பு (Care of the newborn calf)

  • கன்று பிறந்த உடனே அதன் வாயிலும் மூக்கிலும் போர்த்தியுள்ள கண்ணாடி போன்ற ஆடையை (Mucous) நீக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

  • தாய் மாடானது அதன் நாக்கினால் கன்றின் உடல் முழுவதும் சுத்தம் செய்யும்.

  • அவ்வாறு செய்யாவிடில் அல்லது குளிர்காலத்தில் ஈரமற்ற துணி (அ)சணல் யைக்கொண்டு கன்றினை சுத்தம் செய்து கன்றிற்கு சீரான சுவாசம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

  • அதன் வயிற்றிலும் நெஞ்சிலும் சிறிது கையினால் அழுத்திவிட்டால் கன்று எளிதாகசுவாசிக்க இயலும்.

  • குட்டி தானாக எழுந்து சென்று தாய்ப்பால் அருந்த முடியவில்லையெனில் அதைத் தூக்கிவிட்டு உதவி செய்யலாம்.

  • முடிந்தவரை 30 லிருந்து 45 நிமிடங்களுக்குள் எழுந்து சென்று தாய்பால் குடிக்கச் செய்ய வேண்டும்.

  • பிறந்த 6 மணி நேரத்திற்குள் சீம்பால் குடிக்கச் செய்ய வேண்டும்.

  • பிறந்த கன்றின் எடையைக் கணக்கிட வேண்டும்.

  • மாட்டின் காம்பினை நன்கு நீரினால் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்.

  • கொட்டிலில் உள்ள திரவங்களை அகற்றி அதை சுத்தப்படுத்த வேண்டும்.

  • கன்றிற்குத் தேவையான படுக்கை வசதி அமைத்துத் தர வேண்டும்.

  • குளிர்காலமாக இருந்தால் அதை குளிரிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

சீம்பால் ஊட்டம் (Semen feed)

  • கன்று பிறந்தவுடன் மாட்டிலிருந்து வரும் முதல் பாலை சீம்பால் என்பர். இது கெட்டியான மஞ்சள் நிறத்திரவம்.

  • இதில் வைட்டமின் ஏ மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாக இருக்கும்.

  • பிறந்த 10 முதல் 12 மணி நேரம் வரை கன்றுகளின் சிறுகுடல் சவ்வுகள் நோய் எதிர்ப்புச் சக்திப் பொருட்களை உட்கிரகிப்பதற்கு வசதியாக அமைந்திருக்கும். எனவே இந்த சமயத்தில் சீம்பாலை உட்கொள்ளச் செய்தல் சிறந்தது.

  • பிறந்த முதல் 3 நாட்களுக்குக் கன்றிற்குத் தவறாமல் சீம்பால் கொடுக்க வேண்டும்.

  • பிறந்த முதல் மூன்று நாட்களுக்கு கன்றிற்குத் தவறாமல் சீம்பால் தரவேண்டும்.

  • நாள் ஒன்றுக்கு 2 வேளை சீம்பால் கொடுக்கலாம்.

  • கன்று பலவீனமாக இருந்தால் 3 முறை குடிக்கச் செய்யலாம்.

  • இது கன்றின் உடல் வெப்பத்தை உயர்த்தி வெதுவெதுப்படையச் செய்கிறது.

  • ஒரு மாதம் கழித்து கன்றுக்கு நல்ல தரமுள்ள பசுந்தீவனமும் 4 மாதத்திற்குப் பிறகு உலர்தீவனமும் அளிக்கலாம்.

மேலும் படிக்க...

காளை மாடுகளின் இனவிருத்திக்கான பராமரிப்பு- சில ஆலோசனைகள்!

மாடுகளின் வாயுத் தொல்லையை தீர்க்க எளிய மருந்து!

பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?

English Summary: Care and maintenance of newborn calves!
Published on: 30 March 2021, 10:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now