மாடுகளில் பெரியம்மை என்பது ஈ, கொசு போன்ற கடிக்கும் இரத்தம் உரிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவக் கூடிய வைரஸ் நோய்யாகும். அவ்வாறு பாதிக்கப்படும் மாடுகளைப் பாதுகாக்க இயற்கை மருந்து பெரிதும் கைகொடுக்கும்.
வாய் வழி மருத்துவம்
வெற்றிலை -10 எண்ணிக்கை
மிளகு - 10 கிராம்
கல் உப்பு - 10 கிராம்
வெல்லம் - தேவையான அளவு
மருந்து தயாரிப்பு (Natural Medicine Preparation)
வெற்றிலை, மிளகு, கல் உப்பு ஆகியவற்றை அரைத்து, தேவையான அளவு வெல்லம் கலந்து சிறிது, சிறிதாக நாக்கினில் தடவி கொடுக்க வேண்டும்.
முதல் நாள், 3மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டாம் நாளிலிருந்து ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் தொடர்ந்து 2 வாரங்களுக்கு கொடுக்க வேண்டும்.
உடம்பின் வெளிப்பகுதியில் பூசும் மருந்து
குப்பைமேனி இலை - ஒரு கைப்பிடி
வேப்பிலை - ஒரு கைப்பிடி
துளசி இலை - ஒரு கைப்பிடி
மருதாணி இலை - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 20 கிராம்
பூண்டு - 10 பல்
வேப்பெண்ணெய் /நல்லெண்ணெய் - 500 மிலி
மேலே பட்டியலிடப்பட்டவைகளை அரைத்து 500 மிலி எண்ணெய்யில் கலந்து கொதிக்கவைத்து பிறகு ஆற வைத்து, காயங்களை சுத்தம் செய்த பிறகு உடலில் மேல் பூச வேண்டும்.
மேலும் படிக்க...
கால்சியம் சத்து குறைபாட்டில் இருந்து மாடுகளை பாதுகாப்பது எப்படி?
கால்நடைத் தீவனங்களுக்கு பூஞ்சான் நச்சு பரிசோதனை அவசியம்!
கால்நடைகளை கட்டிப்போடாமல், மேய்ச்சலுக்கு விடும் இடம் எது தெரியுமா?