பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 31 August, 2020 5:02 PM IST

கால்நடை விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட ஒருங்கிணைந்த மீன் உடனான பசு வளர்ப்பு பெருமளவில் உதவி செய்கிறது.

அத்தகைய மீனுடனான பசு வளர்ப்பு நெடுங்காலமாக நம் நாட்டில் செயல்முறையில் உள்ளது. இவை மீன் உடனான பசு வளர்ப்பை ஒருங்கிணைக்கும் ஒரு பொதுவான ஒருங்கிணைப்பு வடிவமாகும்.

பசுவளர்ப்பு அதிக அளவு உரத்தை சேமிக்கவும், மீனின் உணவு பயன்பாட்டை பூர்த்தி செய்யவும் மற்றும் பால் உற்பத்தி மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் வித்திடுகிறது.

இவ்வகை யுக்தியைக் கடைப்பிடிப்பதன் மூலம், ஒரு மீன் விவசாயி பணத்தை மட்டும் ஈட்டுவதில்லை மாறாக பால், மீன் மற்றும் மாடு இறைச்சி ஆகியவற்றையும் விநியோகிக்கிறார்.

குள மேலாண்மை செயல்முறைகள்

பசுவின் சாணமானது மீன்களின் வளா்ச்சிக்கு பக்குவமான உரமாக பயன்படுகிறது. இதன் காரணமாகவே,  சராசரியாக 5000 முதல் 10,000 கி.கி என்ற அளவில் 1 ஹெக்டேருக்கு தகுந்த இடைவெளியில் குளத்திற்கு அளிக்கப்படுகிறது.

Credit: TNAU

அதேநேரத்தில் பசு மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்யும் போது கிடைக்கும் சாணம் கலந்த கழிவு நீர், சிறுநீர், பயன்படுத்தப்படாத மீதமான உணவு பொருட்கள் ஆகியவற்றைக் குளத்தில் சேர்த்து விடலாம்.

அவ்வாறு போடப்படும் மாட்டுச் சாணமானது மிதவைகள் வளர்ச்சியை பன்மடங்கு ஊக்குவிக்கிறது. அதேநேரத்தில் மீனுக்கு உணவாகவும் பயன்படுகிறது.

கால்நடை வளர்ப்பு முறைகள்

  • ஒருங்கிணைந்த மீன் உடனான பசு வளர்ப்புக்கு, மாட்டுக் கொட்டகையை மீன்குளத்தின் அருகிலோ அல்லது அதன் கரையோரப் பகுதியிலோக் கட்ட வேண்டும்.

  • உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மாட்டுக் கொட்டகையைக் கட்டலாம்.

  • தரையானது சிமெண்டினால் பூசப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.

  • மாட்டுக் கொட்டகையின் கழிவுகள் மீன்குளத்தை அடையும் வண்ணம் அதன் வெளிபுறகுழாய் (அ) கால்வாய் குளத்துடன் இணைக்க வேண்டும்.

இத்தகைய செயல்பாட்டின் மூலம் விவசாயிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்க முடியும்.

மேலும் படிக்க...

விவசாயத்தில் இரட்டை லாபம் ஈட்ட வேண்டுமா? வேளாண்மை மீன் வளர்ப்பில் ஈடுபடுங்கள்!

சாணத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க நீங்க ரெடியா? எளிய வழிமுறைகள்!

English Summary: Cattle breeding with integrated fish- you know!
Published on: 31 August 2020, 05:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now