மதுரை ஆவினில் மாட்டுத்தீவன மானியம் ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ளதாலும், பால் பணம் பட்டுவாடா தொடர்ந்து இழுத்தடிப்பதாலும் பால் உற்பத்தியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆவினுக்கு பால் வழங்க 800க்கும் மேற்பட்ட கூட்டுறவு சொசைட்டிகள் உள்ளன. ஒவ்வொரு சொசைட்டியிலும் மாடு வளர்க்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு குச்சி புண்ணாக்கு மாட்டுத் தீவனம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
தீவன மானியம் (Fodder Subsidy)
ஆவினில் அவ்வப்போது கிடைக்கும் இலாபத்தை பொறுத்து தீவன மானியம் மாற்றப்படும். தற்போது ஒரு கிலோவுக்கு 25 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 வீதம் அரசு குறைத்ததால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தீவன மானியத்தை நிறுத்தி விட்டதாக உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் வெண்மணிசந்திரன் கூறுகையில், மதுரை ஆவின் இலாபத்தில் இயங்குவதால் 50 சதவீத தீவன மானியம் கேட்கிறோம். ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 25 சதவீத மானியம் ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
பாலுக்கான பட்டுவாடாவும் 30 நாட்கள் வரை நிலுவையில் உள்ளதால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். என்றார்.
மேலும் படிக்க
பசுவில்லாத பால்: அதே மணம், சுவை: உடலுக்கு நல்லதா?
வீசும் காற்றைக் கட்டுப்படுத்தி கூடுதல் இலாபம் தரும் 'ஜிங்குனியானா' சவுக்கு மரம்!