கால்நடைகளுக்குத் தீவனத்திற்கு பதிலாகச் பால்வளத்தை அதிகரிக்கும் சாக்லேட்டைக் கொடுக்கலாம் என மத்தியப் பிரதேசப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.
மேய்ச்சல் வேண்டாம்
எனவே கால்நடைகளுக்கு இனிமேல் தீவனம் கொடுக்க வேண்டாம், காட்டில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம், சாக்லேட் கொடுத்தாலே அதிக பால் சுரக்கும்.
புதியச் சாக்லேட் (Fresh chocolate)
மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரை மையமாக கொண்ட கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், பல்வகை வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் கொண்ட சாக்லேட்டை உருவாக்கியுள்ளது.
பால் உற்பத்தியை அதிகரிக்கும் (Increase milk production)
தீவனம், கால்நடைகள் மேய்ச்சல் ஆகியவற்றிற்கு மாற்றாக இந்த சாக்லேட்டை பயன்படுத்தலாம். இந்த சாக்லேட் பால் உற்பத்தியை அதிகரிப்பதுடன், கால்நடைகளின் இனப்பெருக்கத்தை மேம்படுத்தும் எனப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் விநியோகம் (Delivery soon)
மாநில கால்நடைகள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை உதவியுடன் விரைவில் மாநிலம் முழுவதும் வினியோகம் செய்யப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வரப்பிரசாதம்
பரிசோதனையில் இந்த சாக்லேட் தீவனத்திற்கு நல்லப் பலன் கிடைத்தால், இனிமேல் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்லத் தேவையில்லை. அதற்கான அலைச்சலும், கால்நடை விவசாயிகளுக்கு இல்லை. இந்தக் கண்டுபிடிப்பு கால்நடை விவசாயிகளுக்கு வரப்பிரசாமாகவேப் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
இதை உற்பத்தி செய்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம்!
விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!