பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 20 May, 2021 8:38 AM IST
Credit : Dinamani

விவசாயத்தின் ஆதரவுத் தொழிலானது கால்நடை வளர்ப்பு. ஏனெனில், பயிர் கைவிடும் சமயத்தில், பால்வியாபாரம் கைத்தூக்கி விடும்.

அவ்வாறு பால்பண்ணை அமைத்து, பால் வியாபாரத்தின் மூலம் வருவாய் ஈட்ட நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குத்தான்.

நல்ல மாடு மற்றும் எருமைகளைத் தேர்வு செய்யும் முறை

பசுக்களின் அடையாளங்கள் (Signs of cows)

  • பசுக்கள் பார்க்கச் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

  • உடல் முன்பகுதி சிறுத்து இருக்க வேண்டும்.

  • பின்பகுதி பெரியதாக இருத்தல் அவசியம்.

  • உடலில் உள்ள எலும்புகள் தெரியும்படி இருக்க வேண்டும்.

  • பால்மடி பஞ்சுபோல் இருக்க வேண்டும். அதனைத் தொட்டவுடன் பால் வழிய வேண்டும்.

  • பால்மடி, பால் சுரக்கும் பால் கொடிக்கண், தொப்புள் வரை நீண்டு இருப்பது அவசியமான ஒன்று.

  • பாய்ச்சல் இல்லாமலும் இருக்க வேண்டும்.

  • இரண்டாம் ஈற்று மாடாக இருக்க வேண்டும். 2ம் ஈற்றில் இருந்து 4-ம் ஈற்று வரை பால் படிப்படியாக அதிகமாகிவரும்.

  • 5ம் ஈற்று முதல் பால் குறையத் தொடங்கிவிடும்.

  • வால் நீண்டு இருத்தல் அவசியம்.

  • மிகச்சிறிய மடியாக இருந்தால், பாலின் அளவு குறைவாகவே இருக்கும். மடித் தொங்கிக் கொண்டும், துருத்திக்கொண்டும் இருக்கக்கூடாது.

  • பால் நாளங்கள் நிறைந்து இருக்க வேண்டும்.

  • மேல் உதடு இலேசாக ஈரப்பசையுடன் இருக்க வேண்டும்.

  • தீவனங்களை நன்றாக அசைபோட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

  • பால் காம்புகளின் இடைவெளி ஒரே சீராக இருக்க வேண்டும்.

  • மாட்டின் தோல் மென்மையானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

  • மூக்குத் தண்டு நேராக இருப்பது அவசியம். கண்கள் பிரகாசமாக துருத்துருவெனி இருக்க வேண்டும்.

  • இத்தனை அம்சங்களும் நிறைந்திருக்கும் பசு மற்றும் எருமைகளை வாங்கி பால்பண்ணை அமைத்தால், நல்ல லாபம் ஈட்டலாம்.

இந்த அனைத்து அம்சங்களும் நிறைந்த பசு மற்றும் எருமைகளைத் தேர்வு செய்து பால் பண்ணை அமைப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவற்றுக்கு தரமான தீவனம் அளித்து, முறையாகப் பராமரித்தால், பால் வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும். 

மேலும் படிக்க....

சினை ஆடுகளுக்கானத் தீவன மேலாண்மை!

கோழிகளுக்கு வெப்ப அயற்சியைத் தடுக்க குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும்! ஆராய்ச்சி நிலையம் தகவல்

பால் பண்ணை அமைக்க ரூ.1.75 லட்சம் மானியம்- மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!!

English Summary: Choose cows that will help you make a dazzling profit in the dairy business!
Published on: 20 May 2021, 08:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now