மனிதர்கள் மட்டுமல்ல, மாடுகளுக்கும் உள்ள ஒரு முக்கியமான பிரச்னை என்றால் அது மலச்சிக்கல்தான். அன்றாடம் நம்மை நகர்த்திச் செல்வது எதுவென்றால், அது நிச்சயம் நம்முடைய ஜீரணம்தான்.
உடலும், உள்ளமும் (Body and mind)
ஜீவனம் நல்லதாக அமைய, உணவு கிடைத்தால் மட்டும் போது, ஜீரண மண்டலமும் சீராக இருக்க வேண்டும். அப்போதுதான், உடலும், உள்ளமும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
மாடுகளின் பிரச்னை (The problem of cows)
இந்த வரிசையில் மாடுகளுக்குத் தீராதத் தலைவலியாக இருப்பது என்னவோ மலச்சிக்கல்தான்.
அறிகுறிகள் (Symptoms)
-
கால்நடைகளின் சாணம் கல் போல் இறுகலாக இருக்கும். மாடு சாணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புழுக்கை போல திணறிக் கொண்டு போடும் அல்லது சாணம் போடாமலேயே இருக்கும்.
-
தீனி தின்னாமலும், அசை போடாமலும் குறுகிப்போயும், சோர்வாகக் காணப்படும்.
காரணங்கள் (Reasons)
சில கால்நடைகளுக்கு வயிறு செரிமானக் கோளாறு என்பது, சத்து இல்லாத வறத்திவனத்தை அதிகமாக உண்பதால் உருவாகிறது. மாடுகளுக்குப் பிடித்தமான ஆகாரம் கிடைக்கும் பொழுது, அவற்றை அளவுக்கு அதிகமாகத் தின்று விடுவதால் ஏற்படுகிறது.
தண்ணீர் இல்லாமல் (Without water)
மேலும் கால்நடைகளுக்கு வரத்தினையும் அதிகமாகக் கொடுப்பதுடன், போதியளவு தண்ணீர் கொடுக்காமல் இருப்பதாலும் இது உண்டாகும்.
வைத்தியம் (Remedies)
-
நிலவாகையை கால்கிலோ அளவு அரைத்து எடுத்து 1 லிட்டர் நீரில் கலந்து உள்ளே கொடுக்க வேண்டும்.
-
அல்லது 2 லிட்டர் நீரை சூடு செய்து அதில் உப்பு 200 கிராம், சுக்குத்தூள் 50 கிராம் சேர்த்து மாடுகளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
-
இவ்வாறு கொடுத்து 12 மணி நேரத்திற்குள் பேதி ஆகாமலிருந்தால் விளக்கெண்ணெய் 300 மி.லி உள்ளே தரலாம்.
பிற வைத்திய முறைகள் (Other medical methods)
நாய்ப்பாகை இலை 100 கிராம் அரைத்து அரை லிட்டர் பாலுடன் கலந்து உள்ளேக் கொடுக்க வேண்டும்.
தகவல்
ஜெயகாந்தன்
கால்நடை விவசாயி
பட்டுக்கோட்டை
மேலும் படிக்க...
ஔவை முதல் சித்தர்கள் வரை கொண்டாடிய கனி: முதுமையை போக்கி என்றும் இளமையை தரும் நம் நாட்டுகாய்