கொரோனாப் பொது முடக்கம் காரணமாக, கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள் (Preventive measures)
கொரோனா வைரஸ், தொற்றுப் பரவல் தீவிரம், அதனைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வில்லா ஊரடங்கு என அரசும் பல ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகிறது.
கொரோனாவால் பாதிப்பு (Damage by corona)
அதேநேரத்தில் கொரோனாவால் பல பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், அசைவப் ப்ரியர்களின் சாப்பாடு வேட்கையும் காணாமல் போக நேர்ந்தது.
சாப்பிட முடியாமல் போனது (Unable to eat)
குறிப்பாக ஞாயிறு ஊரடங்கு, அசைவப் ப்ரியர்களின் நாக்கைக் கட்டிப்போட்டது என்றே சொல்லலாம். இதனால், பல கோடி ரூபாய் அளவுக்கு கறிக்கோழி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழுச் செயலாளர் சுவாதிக்கண்ணன் கூறுகையில்,
விற்பனை குறைந்தது (Sales are low)
பல்லடம் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணைகள் வாயிலாக வாரம் 2 கோடிக் கிலோக் கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் 50 முதல் 60 சதவீத விற்பனை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து 40 சதவீதம் விற்பனை குறைந்தது.
உற்பத்திக்கு ரூ.90 செலவு (Cost of Rs.90 for production)
தீவன விலை உயர்வால் கறிக்கோழி ஒரு கிலோ உற்பத்திக்கு காய்கறி, பால் போன்று கறிக்கோழி உற்பத்திக்கு ரூ.90 செலவாகிறது. அதேநேரத்தில் கோழியையும் உடனுக்குடன் விற்பனை செய்தாக வேண்டும்.
ரூ.300 கோடி இழப்பு (Rs.300 crore loss)
இதன் காரணமாகக் கடந்த சில நாட்களில் மட்டும் கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு ரூ.300 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விலக்கு தேவை(Exemption required)
கோழி இறைச்சியைப் புரத சத்துமிக்க உணவு என மத்திய அரசு அறிவித்துள்ளதை கருத்தில் கொண்டு கறிக்கோழி விற்பனைக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி விலக்கு அளிக்க வேண்டும்.
சிக்கனைப் பேக்கிங் செய்து, வீடுகளுக்கே நேரடியாக விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். கறிக்கோழித் தொழிலை பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க...
கால்நடைகளுக்கு கோடை கால தீவனப் பற்றாக்குறையைப் போக்க மர இலைகள்! கால்நடை மருத்துவர் யோசனை
கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!