மாட்டு சாணம்:
மாட்டு சாணதில் நமக்கு பல நன்மைகள் செய்யும் நுண்ணுயிர்கள் இருப்பதால் நாம் நம் வீட்டு வாசலில் தெளித்து வந்தால் நோய் இன்றி வாழலாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
இன்றும் கிராமப்புறங்களில் மாட்டு சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கும் பழக்கத்தை கடைபிடிக்கிறாரகள். அது மட்டுமல்லாமல் அனைத்து சுப காரியங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் சாணம் பிள்ளையார் பிடிப்பது வழக்கம்.
கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் மாட்டு சாணம்
மாட்டு சாணம் கோழிகளுக்கு ஒரு நல்ல சத்தான புரோட்டின் நிறைந்த தீவனமாக பயன்படுகிறது. நாம் நம் வீட்டில் வளர்க்கும் மாடுகளில் இருந்து கிடைக்கும் மாட்டு சாணத்தை வைத்து கோழி வளர்ப்பில் தேவைப்படும் புரோட்டின் சத்து அதிகம் உள்ள தீவனத்தை செலவில்லாமல் தயாரிக்க முடியும்.
மாட்டு சாணம் மூலம் கோழி தீவனம் தயாரிக்கும் செயல்முறை
இந்த முறைகளை கடைபிடித்தால் நாம் கோழிகளுக்கு எளிய வழியில் தீவனம் தயார் செய்யலாம். இதற்கு இரண்டு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்.
தேவையான பொருட்கள்:
*மாட்டு சாணம்
*சணல் சாக்கு
தயரிப்பு முறை:
முதலில் நாம் மாடுகளிலிருந்து கிடைக்கும் புதிய மாட்டு சாணத்தை எடுத்து அதனை நாம் நம் தோட்டத்தில் ஒரு நல்ல நிழல் உள்ள இடத்தில் குவியலாக சேகரித்து வைக்க வேண்டும், பிறகு சணல் சாக்கினை நனைத்து அதனை சானதின் மேல் மூடி வைக்க வேண்டும். நாம் ஈர சாக்கினால் மூடி வைப்பதன் மூலம் சாணம் காய்ந்து போகாமல் இருக்கும். சாணம் காய்ந்து போனால் புழு உருவாகாது.மூடி வைத்த சாகிணை இரண்டு நாட்கள் பிறகு திறந்து பார்த்தால் அதில் கோழிகளுக்கு தேவையான சத்தான புரோடின் நிறைத்த தேவையான புழு உருவாகி இருக்கும். நாம் சாக்கினை திறந்து விட்டால் கோழிகள் புழுவினை கால்களை கொண்டு கிளறி உண்ணும்.
பயன்கள்:
* கோழி குஞ்சுகள் வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
*கோழிகளுக்கு தேவையான புரத சத்து கிடக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு இந்த விதமான தீவனம் செலவை குறைப்பதோடு மட்டுமல்லாமல்,கோழிகளுக்கு தேவையான புரோட்டீன் நிறைந்த தீவனத்தை அளிப்பதன் மூலம் அதிகம் லாபமும் ஈட்ட முடியும்.
மேலும் படிக்க: