மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 February, 2021 11:25 AM IST

மாடுகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது கோமாரிநோய். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகும் மாடுகளின் மிக அதிகம். அதிலும் கோமாரி வாய்ப்புண் என்பது மிகவும் முக்கியமானது.

நோய்க்கான காரணம் (The cause of the disease)

இந்நோய் மாடுகளைத் தாக்கும் கொடிய நச்சுயிரி நோயாகும்.

அறிகுறிகள் (Symptoms)

  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் வாய், கால் மற்றும் மடியில் கொப்புளங்கள் தோன்றும்.

  • பால் கறக்கும் கறவை மாடுகளில் திடீரென பால் உற்பத்தி குறைவு, தாயிடம் பால் குடிக்கும்.

  • கன்றுகள் இறந்து விடுதல், சினை மாடுகளில் கன்று வீசுதல், மற்றும் சினைப் பிடிக்காதிருத்தல் போன்றவையும் இந்நோயின் அறிகுறிகளாகும்.

  • அதிக காய்ச்சல் (104-106 டிகிரி பாரன்ஹீட்) மற்றும் பசியின்மை

  • நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் வாயிலிருந்து உமிழ் நீர் நூல் போல் தொங்கிக்கொண்டு இருத்தல்.

  • வலியின் காரணமாக, பாதிக்கப்பட்ட மாடுகள் காலை உதறிக் கொண்டு இருத்தல், பிறகு நொண்டி நடத்தல்.

  • பாதிக்கப்பட்ட மாடுகளின் வாயில் கொப்புளங்கள், புண்கள் காணப்படுதல்.

  • வலியின் காரணமாக மாடுகள் சப்புக் கொட்டிக்கொண்டு இருத்தல்.

  • பாதிக்கப்பட்ட மாடுகளின் மடியில் கொப்புளங்கள் தோன்றுதல்.

  • இந்த நோயில் இருந்து மாடுகளைப் பாதுகாக்கப் பின்வரும் இயற்கை மருந்தைத் தயாரித்துப் பயன்படுத்தலாம்.


இயற்கை மருந்து (Natural medicine)

தேவையான பொருட்கள் (Ingredients)

சீரகம்                         - 10 கிராம்
வெந்தயம்                   - 10 கிராம்
மிளகு                          - 10 கிராம்
மஞ்சள் பொடி             - 10 கிராம்
பூண்டு                         - 4 பல்
தேங்காய்                     - 1
வெல்லம்                      - 120 கிராம்

தயாரிப்பு முறை (Preparation)

பயன்படுத்தும் முறை (Method of use)

  • வாய், நாக்கு மற்றும் கடைவாயின் உள்புறம் தடவவும்.

  • தயாரித்த கலவையை ஒரு நாளுக்கு மூன்று முறை 3-5 நாட்களுக்குக் கொடுக்கவும்.

நோய் பரவாமல் தடுக்க (Prevent the spread of disease)

  • நோய் தாக்குதலை கண்டறிந்தப் பின்பு நோய் பாதிக்கப்பட்ட மாடுகளை மற்ற மாடுகளிலிருந்து தனியாக பிரித்துப் பராமரிக்கவேண்டும்.

  • மேலும் மாடுகளின் நடமாட்டத்தையும் குறைத்துவிட வேண்டும்.

  • பொதுவான மேய்ச்சல் நிலங்களில் நோய் பாதிக்கப்பட்ட மாடுகளை மேய அனுமதிக்கக்கூடாது.

  • பாதிக்கப்பட்ட மாடுகள், குளங்கள், ஓடைகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் அருந்த அனுமதிக்கக்கூடாது.

  • நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகள் மற்ற மாடுகளுடன் மேயவோ அல்லது அலையவோ அனுமதிக்கக்கூடாது.

  • நோய் பாதிக்கப்பட்ட மாடுகளைப் பராமரிக்கும் பணியாளர்கள், நோயற்ற மாடுகளைப் பராமரிக்கவோ, அல்லது நோயற்ற மாடுகள் பராமரிக்கப்படும் பண்ணைக்குள் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு செய்யமுடியவில்லை எனில் இப்பணியாளர்கள் நோயற்ற பண்ணைகளுக்குள் நுழையும் போது குளித்துவிட்டு (சோப்பைப் பயன்படுத்தி) செல்லவேண்டும்.

மேலும் படிக்க...

வரும் 3ம் தேதி வரை வாட்டி வதைக்கப் போகிறது வெயில்!

பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?

பழங்குடியின விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி- TNAU ஏற்பாடு!

English Summary: Cow Syphilis - Control Methods!
Published on: 28 February 2021, 11:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now