மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு செல்ல அனுமதிப்பதில் காலதாமதம் தொடருவதால், தீவனப் பற்றக்குறையால் மாடுகள் அழியும் நிலையில் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகளை அருகேயுள்ள வனப்பகுதிகளுக்கு மேச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
நீதிமன்றம் மூலம் அனுமதி (Court Permission)
ஆனால் சமீப காலமாக வனப்பகுதிக்குள் மாடுகளை மேச்சலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளிப்பதில்லை. இதனால் மாடுகளை பராமரிக்க முடியாத நிலையில் மாடுகள் வளர்ப்போர் நீதிமன்றம் மூலமாக அனுமதி பெற்றனர். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் வனப்பகுதியில் மேச்சலுக்கு மாடுகளை கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் மூலமாக வனத்துறையினா் அனுமதி வழங்குகின்றனர்.
விவசாயிகள் வேதனை (Farmers Concern)
அதன்படி இந்தாண்டு ஜூன் மாதத்துக்குப் பின் அனுமதி வழங்கவில்லை. இதனால் தீவனப் பற்றாக்குறையால் மாடுகள் படிப்படியாக குறைந்து வருவதாகவும், மேய்ச்சலுக்கு வனத்துறை உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்துக்கு மாடு வளா்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாடு வளர்ப்போர் சங்கத்தினர் கூறுகையில், விவசாயத்துடன் இணைந்து செய்யும் மாடு வளர்ப்பு தொழிலை செய்து வருகிறோம். இப்பகுதியில், 1.50 லட்சமாக இருந்த மாடுகளின் எண்ணிக்கை தற்போது, 15, ஆயிரமாகக் குறைந்து விட்டது.
தீர்மானம் (Resolution)
இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நாடு மாடுகள் இனமே அழிந்து விட வாய்ப்புள்ளது. இது குறித்து எரசக்கநாயக்கனூரில் நடைபெற்ற மாடுகள் வளா்போர் சங்க கூட்டத்தில், பாரம்பரியமான மாடுகளைப் பாதுகாக்கவும், மாடு வளர்ப்போரின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் வனப்பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
மேலும் படிக்க...
எருதுகளை செல்லமாகக் கொஞ்சி வேலைக்குப்பழக்குவது எப்படி? புதிய யுக்திகள்!
கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்- நிவாரணம் தரும் இயற்கை மருந்துவம்!