Animal Husbandry

Thursday, 01 August 2019 03:32 PM

நம்மில் பலருக்கும்  கரையான்கள் பற்றி அறிந்திருப்போம். பார்க்கும்போதே ஒரு வித ஒவ்வாமை ஏற்படுத்தும். ஆனால் இவை நாட்டுக் கோழி சிறந்த அசைவ உணவு எனலாம். கரையானால் ஏற்படும் இடையூறுகளை மட்டுமே கேட்டிருப்போம், ஏன் பார்த்துகூட இருப்போம். ஆனால் நாட்டு கோழி வளர்ப்புக்கு சிறந்த தீவனமாகும் என்பது நம்மில் எதனை பேருக்கு தெரியும்.

நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. மேலும் கரையான்களை நாமே உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்கு உணவாகக் கொடுத்தால், மற்ற குஞ்சுகளைவிட கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் இருமடங்காக வளர்ச்சியடையும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

கரையானால் உண்டாகும் நன்மைகள்

கரையான் உற்பத்திக்கென்று பானையை கவிழ்த்து வைக்கும் போது அது மற்ற பொருட்களை  தாக்குவதில்லை. மேலும் மண் பானையிலிருந்து உருவாகும்  ஒரு வகை வாசனை கரையான்களை எளிதில் கவர்ந்து இழுக்கும். அதுமட்டுமல்லாது  பானைக்குள் வைக்கப்படும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் இவையாவும் கரையான் பானையில் உருவாகுவதற்கு உதவியாக இருக்கும். கரையான் உற்பத்தி மூலம் செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம் கிடைக்கின்றது.

கரையான் உற்பத்தி செய்யும் முறை 

கரையானை உற்பத்தி செய்வது மிகவும் எளிது. பொருள் செலவு ஏதுமில்லாமல் உங்களிடம் உள்ளவற்றை கொண்டு தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்
ஒரு பழைய பானை
கிழிந்த கோணி சாக்கு
காய்ந்த சாணம்
கந்தல் துணி
இற்றுப்போன சிறு கட்டை / மட்டை
காய்ந்த இலை / ஓலை போன்ற நார்ப்பொருட்கள்

கரையான் உற்பத்தி

  • பழைய பானையினுள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக திணித்து சிறிது நீர் தெளித்து சிறிதளவு மண்ணை பரைத்து பானையின் விளிம்பு மண் பகுதிக்குள் இருக்குமாறு கவிழ்த்து வைத்துவிட வேண்டும்.
  • முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை தேவையான கரையான் சேர்ந்திருக்கும்.
  • கோழி குஞ்சுகளுக்கு இந்த கரையானை உணவாக கொடுத்த பிறகு அரை மணி நேரம் வரை தண்ணீர் கொடுக்கக்கூடாது.
  • ஒரு நாளில் பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது.
  • உற்பத்தியாகும் கரையானின் அளவுவானது இடத்திற்கு இடம் மாறுபடும். பொதுவாக செம்மண் பகுதியில் அதிக அளவு கரையான் உற்பத்தியாகும். அதிக கரையான் தேவையென்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம்.

பானையில் கரையான் எப்படி உருவாகிறது?

  • பானையில் உற்பத்தியாகும் கரையான் ஈர மரக்கரையான் வகையை சேர்ந்தது. இவ்வகை கரையானானது கால்நடைகளை போல் நார்ப் பொருட்களை உண்டு உயிர் வாழும் பூச்சியினமாகும்.
  • கரையானின் குடலானது நுண்ணுயிரிகளை கொண்டுள்ளது. இது நார்ப் பொருள்களை எளிதில் செரிக்க வைக்க வல்லது. மேலும் அதற்கு தேவையான நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது.
  • பானையிலுள்ள பொருட்களின் மீது நீர் தெளிக்கும் போது கரையான்கள் எளிதில் உருவாகும். பொதுவாக இரவில் இவை மிக அதிகமாக செயல்படும் என்பதால் மாலை நேரத்தில் மண் பகுதியில் பானையை கவிழ்த்து வைத்தால் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து கோழிகளுக்கு உணவாகக் கொடுப்பது சாலச் சிறந்தது.
  • காலம் காலமாக கோழிகளுக்கு தீவனமாக கரையான்கள் இருந்து வருகின்றன. கோழிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவாக இருப்பதால் கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)