Animal Husbandry

Tuesday, 05 November 2019 05:45 PM , by: KJ Staff

Credit: bbcgoodfood

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பால் குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை (Calories) எரிக்கவும் பால் உதவுகிறது. மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு (Bones) உறுதியும் அளிக்கிறது.

சத்துக்கள்

பசும்பால் 90% நீர்தன்மையுடன் அடர்த்தி குறைவாகவும், எளிதில் ஜீரணிக்க கூடியது. எருமை பாலில் கால்சியம் (Calcium), பாஸ்போரோஸ் , மெக்னீசியம், புரதம், கொழுப்புச் சத்து  மற்றும் பொட்டாசியம் அதிகம் காணப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

  • மாட்டுப்பாலை விட எருமைப்பாலில் 100% கொழுப்பு (Fat) சக்தி அதிகம் உள்ளது. மேலு இது உடல் பருமனாக இருப்பவர்கள் குடித்தால் உடல் எடை மேலும் அதிகரிக்க கூடும்.
  • எருமை பாலில் 11 சதவீத அளவு புரதச்சத்து (Proteins) இருப்பதால் தலை முடிக்கு மிகவும் நல்லது. தலை முடி சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் எருமைப்பால் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
  • எருமை பால் உடலின் உள்ள உறுப்புகளை சுத்தமாகவும் மற்றும் சத்தாகவும் வைத்துக்கொள்வதுடன் உடலின் வெளி பாகங்களுக்கும் நல்லதாகும். பாலை தொடர்ந்து குடித்துவந்தால் முகம் பளபளக்கும் மேலும் சருமம் சார்ந்த பிரச்சனைகள் தீர்வு பெரும்.
  • பசும்பாலில் 90% சதவீதம் நீர்த்தன்மை உண்டு. பசும்பாளில் புரதம், கொழுப்பு, மற்றும் கார்போஹைட்ரெட் (Carbohydrate) உள்ளது. எருமை பாளை விட கொழுப்பு தன்மை இதில் குறைவு. பசும் பால் எளிதில் ஜீரணமாக கூடியது என்பதனால் இதனை பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
  • எருமை பாலை நீண்ட நாள் வரை வைத்து பயன்படுத்தலாம் , ஆனால் பசும்பாலை 1அல்லது 2 நாள் வரை மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும்.

Credit : Wikipedia

இரண்டுமே சிறந்ததுதான், பாக்கெட் பாலுடன் ஒப்பிடுகையில். பால் என்றாலே ஆரோக்கியம், சத்து, வலிமை ஆகியவை. தங்கள் உடல் தன்மைக்கேற்ப இவ்விரண்டில் எதை வேண்டுமானாலும் குடிக்கலாம். உடல் பருமனாக இருப்பவர்கள்,  ஜீரண கோளாறு இருப்பவர்கள், பசும்பாலை குடிக்கலாம். தேகம்  மெலிந்தவர்கள்,  சருமம் (Skin) சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் எருமை பாலை மேற்கொள்ளலாம். அவரவரின் உடல் தன்மைக்கேற்ப தங்களது விருப்பத்திற்கு ஏற்றபடி எடுத்துக்கொள்ளலாம். பாக்கெட் பாலிற்கு (Pocket milk) பதிலாக கறந்த எருமைபால்,  பசும்பால் எடுத்துக்கொள்வது உடலுக்கும் மற்றும் அதனை வளர்ப்பவர்களுக்கு நன்மை அளிப்பதாக அமையும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

Credit : greenqueen

மேலும் படிக்க

கால்நடைக்கு தீவிரமாய் பரவும் அம்மை நோய்! போர்க்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்த்தால், கூடுதல் இலாபம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)