15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 2 February, 2022 3:30 PM IST
indian Breed
Credit : britannica.com

கறவை மாடு வளர்ப்பு

நம் நாட்டில் பசு என்பது வணங்குவதற்கும், போற்றுதலுக்கு உரியதாகவும் உள்ளது. இந்தியாவில்  உழவும், காலநடை வளர்ப்பும் மிக முக்கியமான தொழிலாகும். ஒரு நாட்டின் தன்னிறைவு என்பது உற்பத்தியாகும் உணவு தானியமும், பாலும் வைத்து கணக்கிட படுகிறது. பால் என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்ற உணவாகும். கறவை மாடு வளர்ப்பு என்பது வேளாண் துணைத்தொழில்களில் முக்கியமானது. மாடு வளர்ப்பு என்பது  நல்ல லாபம் தரக்கூடிய தொழில்தான் என்றாலும் முறையாக கையாண்டால் மட்டுமே லாபத்தை பார்க்க இயலும்.

பசு வளர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்

  • பசுவின் பால், தயிர், நெய்,வெண்ணெய் போன்ற பொருட்களை சந்தை படுத்தலாம். 

  • பசுவின்சாணம் உரமாகவும், எருவாகவும் பயன் படுகிறது.

  • பஞகவ்யம் எனும் உயிர்சத்து நிறைந்த உரம் தயாரிக்க பயன்படுகிறது. இதன் மூலப்பொருள் பசுவின்சாணம், தயிர்,பால், நெய், கோமேயம் போன்ற பொருட்களை கொண்டு பஞகவ்யம் தயாரிக்க படுகிறது. 

கால்நடை வளர்ப்பில் கறவை மாடு வளர்ப்பு என்பது ஆண்டு முழுவதும் சுயவேலைவாய்ப்பு அளிப்பதுடன் நிலையான வருவாய்யினை  ஈட்டிக்கொடுக்கிறது. ஆரோக்கியமான கன்றுகளை உருவாக்குவதன் மூலம் ஆரோக்கியமான பசுக்களை நாம் உருவாக்கலாம். எனவே நாம் கறவை மாடுகளை வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும். கறவை மாடுகளை வாங்கும் போது சந்தைகள், வீடுகள், தரகர்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள் மூலம் தேர்ந்தெடுத்து வாங்கலாம்.

எவ்வாறு கறவை கலப்பினங்களை தேர்தெடுப்பது?

பொதுவாக கலப்பின பசுக்களை தேர்தெடுக்கும் போது எந்த இனமாக இருந்தாலும் இளவயது மாடுகளை வாங்குவதே நமக்கு லாபகரமாக இருக்கும்.கலப்பினங்களில் ஜெர்சி (Jersy) பசுக்கள், வடநாட்டைச் சேர்ந்த கறவை இனங்களான கிர், சாகிவால் தார்பார்கள் போன்ற இனங்களை தேர்தெடுப்பது சரியாக இருக்கும். சினை மாடுகள்,  முதல் அல்லது இரண்டாவது ஈற்று மாடுகளை வாங்குவது சிறந்தது. மாடுகள் வாங்கும் போது நாம் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  மாடுகளின் நாசிகளுக்கு நடுவே உள்ள கறுப்பு பகுதி ஈரமாக இருக்க வேண்டும். இது சீரான சுவாசத்தை உறுதி செய்யும். எப்போதும் அசைபோட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதன் தோல்களை தொட்டு பார்க்கும் போது மிருதுவாகவும், மினுமினுப்பாகவும் இருத்தல்  வேண்டும். அதே போன்று நாம் கவனிக்க வேண்டிய மற்றொன்று, அதன்  சாணம் (Dung), சிறுநீர் போன்றவை மாட்டின் ஆரோக்கியத்தை தெரிவிப்பது ஆகும். அதன் சாணம், ரத்தம், சீதம் அல்லது துர்நாற்றத்துடன் இருந்தாலோ அல்லது சிறுநீர் நிறமற்று சிவப்பு (Red) நிறமாக இருந்தாலோ, மாட்டின் ரோமங்கள் பெரிதாகவும் அடர்த்தியாகவும் இருந்தாலோ அது நோயின் அறிகுறியாகும்.

நோய் தொற்றுலிருந்து பாதுகாக்க

பொதுவாக மாடுகளை  தாக்கும் நோய்களும் அதன் சிகிசைகளும் (Treatments) கீழே கொடுக்க பட்டுள்ளது.

  • கோமாரி நோய்  - முதலில் 4 மாத வயதில் பின்பு 6 மாதத்திற்கு ஒருமுறை தடுப்பூசி (Vaccine) போட வேண்டும்.

  • சப்பை -  முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி வேண்டும்.

  • தொண்டை அடைப்பான் - முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம்.

  • அடைப்பான் - முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம். (நோயுள்ள பகுதிகளில் மட்டுமே இத்தடுப்பூசி போட வேண்டும்).

சரிவிகித உணவின் அவசியம்

சரிவிகித உணவு, சிறந்த பராமரிப்பு ஆகியன  மிக முக்கியமானதாகும். பொதுவாக கலப்பின கிடாரிக் கன்றுகளை நாம் சரியாக கவனித்தோம் என்றால் 12 முதல் 18 மாத வயதில் சுமார் 200 கிலோ உடல் எடையை அடைந்து பருவ வயதை எட்டிவிடும். இரண்டு வயதிற்குள் கன்றுகள் சுமார் 200 கிலோ வந்த பின்பு சரியான தருணத்தில் இனப்பெருக்கம் செய்தால் அது மூன்று வயதிற்குள் முதல் கன்றை ஈனும். ஏதேனும் காரணங்களால் இந்த கால இடைவெளி தள்ளிப்போனால் அவ்வளவு நாட்கள் கன்று பிறப்பு தள்ளிப்போகும். இதனால் பண்ணையாளர்களுக்கு பொருளாதார இழப்பு (Loss) ஏற்படும்.

அடர்தீவன மேலாண்மை

கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனம்  அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரிவிகிததிலும்  இருக்க வேண்டும். கால்நடைகள் விரும்பி உண்ணும் தீவனமாகவும் விலை மலிவாகவும் இருத்தல் அனைவர்க்கும் நன்று. அடர்தீவனக்கலவையில் 100 கிலோ தயாரிக்க கீழ்க்கண்ட விகிதத்தில் பொருட்களை கலந்து தயாரிக்கலாம்.

அடர்தீவனம் தயாரிக்கும் முறை 

  1. தானிய வகைகள் - 35 கிலோ ( மக்காச்சோளம் அல்லது கம்பு அல்லது சோளம்),

    புண்ணாக்கு வகைகள் - 25 கிலோ (கடலைப்புண்ணாக்கு அல்லது எள்ளுப்புண்ணாக்கு),

  2. தவிடு வகைகள் - 37 கிலோ (அரிசித்தவிடு அல்லது கோதுமை தவிடு),

  3. தாது உப்புக்கள் - 2 கிலோ (அக்ரிமின் அல்லது சப்ளிவிட் - மருந்துவ கடைகளில் கிடைக்கும்),

  4. சாதாரண உப்பு – 1 கிலோ (சாப்பாடு உப்பு).

பசுந்தீவனம் உற்பத்தி

பசுந்தீவனத்தை (Green Fodder) நாமே உற்பத்தி செய்வதன் மூலம் அதிகப்படியான செலவை குறைத்து பண்ணையை இலாபகரமாக நடத்த இயலும். அதுமட்டுமல்லாது  பசுந்தீவனம் அதிக நார் சத்து மற்றும் புரதசத்து (proteins) கொண்டுள்ளது.  பல்லாண்டு தீவனப்புல் வகை – கம்பூ நேப்பியர் வீரியப்புல் ( கோ-1, கோ-3, கோ-4 ), கினியா புல், கொழுக்கட்டைப்புல், எருமைப்புல். தானியப்பயிர்கள் - தீவனச்சோளம், கம்பு, மக்காச்சோளம். பயறு வகை தீவனம் - வேலிமசால், காராமணி, குதிரைமசால், முயல்மசால், சணப்பை. தீவன மரங்கள் - சவுண்டல், அகத்தி, கிளைரிசிடியா.

பால் மடியில் கவனிக்க வேண்டியவை

கறவை மாடுகளில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொன்று அதன் பால்மடி. பொதுவாக ஆரோக்கியமான, இளவயதுடைய கறவை மாடுகளின் பால்மடி என்பது உடலோடு ஒட்டி பொருந்தி இருக்க வேண்டும். காயங்கள், கொப்புளங்கள் ஏதுமின்றி மடி மிருதுவாக இருக்க வேண்டும். அதன் நான்கு காம்புகளும் சீராக சதுர வடிவில் உள்ளது போல் இருக்க வேண்டும். பால்கறக்கும் போது காம்புகளில் எந்தவித அடைப்புகள்  இல்லாமல்  காம்புத் துவாரம் நன்றாக இருந்தால்தான் பால் கறக்கும் போது சீராக வரும். மடிக்குச் செல்லும் இரத்த நாளங்கள் பார்க்கும் போது  நன்கு புடைத்துக் காணப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கறவை மாடு வாங்கும் பொழுது கால்நடை மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சால சிறந்தது.

நாட்டு மாடு வகைகள்

அத்தக்

கருப்பன்

 காரிக்

காளை

 படப்பு

பிடுங்கி

செம்மறைக்

காளை

வெள்ளைப்போரான்

அழுக்கு

மறையன்

காற்

சிலம்பன்

 படலைக்

கொம்பன்

செவலை

எருது

மயிலைக்

காளை

அணறிகாலன்

காராம்பசு

பட்டிக்

காளை

செம்ம()றையன்

வெள்ளை

ஆளை

வெறிச்சான்

குட்டை

செவி ன்

 பனங்காய்

மயிலை

செந்தாழ வயிரன்

கழுத்திக பிள்ளை

ஆனைச்சொறியன்

குண்டுக்

கண்ணன்

பசுங்

கழுத்தான்

சொறியன்

கருக்

கா யிலை

கட்டைக்

காளை

குட்டை

நரம்பன்

பால்

வெள்ளை

தளப்பன்

பணங்காரி

கருமறையன்

குத்துக்

குளம்பன்

பொட்டைக்

கண்ணன்

தல்லயன் காளை

சந்தனப்

பிள்ளை

கட்டைக்காரி

 குட்டை செவியன்

போருக்

காளை

தறிகொம்பன்

சிந்துமாடு

கட்டுக்

கொம்பன்

குள்ளச்

சிவப்பன்

மட்டைக் கொலம்பன்

துடைசேர்

கூழை

செம்

பூத்துக்காரி

கட்டைவால் கூளை

 கூழை

வாலன்

மஞ்சள்

வாலன்

தூங்கச்

செழியன்

செவலமாடு

கருமறைக்

காளை

கூடுகொம்ன்

மறைச்

சிவலை

வட்டப்புல்லை

பொங்கு

வாயன்

கண்ணன் மயிலை

கூழைசிவலை

மஞ்சலி

வாலன்

வட்டச்

செவியன்

சர்ச்சி

கத்திக்

கொம்பன்

கொட்டைப்

பாக்கன்

மஞ்ச

மயிலை

வளைக்

கொம்பன்

நாட்டுமாடு

கள்ளக்

காளை

கொண்டைத்தலையன்

மயிலை

வள்ளிக் கொம்பன்

 

கள்ளக்

காடன்

ஏரிச்

சுழியன்

மேக

வண்ணன்

வர்ணக்

காளை

 

கட்டைக்கொம்பன்

ஏறுவாலன்

முறிகொம்பன்

வட்டக்

கரியன்

 

கருங்கூழை

நாரைக்

கழுத்தன்

முட்டிக்காலன்

வெள்ளைக்

காளை

 

கழற்வாய்வெறியன்

நெட்டைக்கொம்பன்

முரிகாளை

வெள்ளைக்

குடும்பன்

 

கழற்சிக்

கண்ணன்

நெட்டைக்

காலன்

சங்கு

வண்ணன்

வெள்ளைக்

கண்ணன்

 

 

 

Credit : Wikipedia

மாட்டுக்கொட்டகை  அமைக்கும் முறை

மாட்டுக்கொட்டகை அமைப்பதற்கு என்று பிரத்யேகமாக எந்த வரையறையும் இல்லை எனலாம். பொதுவாக வீடுகளில் வளர்க்க படும் கறவை இனங்கள் வீட்டிற்கு வெளியிலோ, அல்லது மரத்தடி நிழலிலோ கட்டி வைப்பார்கள். இது வீடுகளில் வளர்க்கும் பசுக்களுக்கு (Cows) போதுமானது.

பசுக்களின் எண்ணிக்கையை பொறுத்து அவரவர் வசதி வாய்ப்புகளுக்கு தகுந்தாற்போல் பனை, தென்னை ஓலை மூங்கில் கொண்டு அமைக்கலாம் அல்லது செங்கல், சிமிண்ட், ஆஸ்பெஸ்டாஸ் அலுமினியம் (Aluminium) கூரையுடன் கூடிய கட்டிடமாகவும் அமைக்கலாம். கொட்டகையின் நீளம் கிழக்கு மேற்காக இருக்குமாறு அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் வெயில் நேரடியாக உள்ளே வராமல் இருக்கும். கொட்டகையைச் சுற்றி மாடுகள் காலாற உலாவர திறந்தவெளிபரப்பு இருத்தல் நன்று. கூரையின் குறைந்தபட்ச உயரம் (Minimum Height) 220 செ.மீ. இருந்தால் போதுமானது ஆகும்.

அரசால் அங்கீகரிக்க பட்ட கலப்பினங்கள்  

அமிர்தமஹால்

 

கென்கதா

 

ரத்தி

 

காரியர்

 

பச்சூர்

 

கெரிகர்

 

ரெட் காந்தாரி

 

புலிக்குளம்

 

பர்க்கர்

 

கிலர்

 

ரெட் சிந்தி

 

கோஷாலி

 

டாங்கி

கிருஷ்ணா வெலி

சாஹிவால்

மல்நாட்கிடா

 

டெயோனி

 

மால்வி

 

சிரி

 

பெலஹி

 

கயலோ

 

மேவாட்டி

 

தர்பார்கர்

 

கங்காட்டிரி

 

கிர்

 

நேகோரி

 

உம்பளச்சேரி

 

பாட்ரி 

 

கள்ளிகர்

 

நிமரி

 

வெச்சூர்

 

லட்சுமி

 

ஹரியானா

 

ஓங்கோலே

 

மோட்டு

 

லாடக்ஹ்ய

 

காங்கயம்

பொன்வர்

குமுஸரி

கொன்கான் கபில 

 

கண்கேர்ஜ்

 

புங்கனுர்

 

பிஞ்சர்புரி

 

 

மேலும் படிக்க

கால்நடைக்கு தீவிரமாய் பரவும் அம்மை நோய்! போர்க்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்த்தால், கூடுதல் இலாபம்!

English Summary: Do You Want To Start Cattle Farm? Do you Know How Many Breeds Are In India? Here Are Guidelines Cattle Farm
Published on: 20 June 2019, 02:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now