Animal Husbandry

Wednesday, 15 March 2023 06:37 AM , by: R. Balakrishnan

Domestic chickens

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இல்லை. நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 1 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஈரப்பதம் (Moisture)

வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு 4 கி.மீ., 6 கி.மீ., ஆகவும், 4 கி.மீ.வேகத்தில் வடமேற்கு திசையில் இருந்தும் வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சம் 20 சதவீதமாகவும் இருக்கும்.

தடுப்பூசி சிறப்பு

வானிலையைப் பொறுத்த வரையில் தற்போது நிலவும் வானிலையில் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நோயின் அறிகுறிகள், தலையை ஒரு பக்கமாக சாய்த்துக் கொள்ளுதல், கழிச்சல் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து இறப்பு ஏற்படும்.

நாட்டுக்கோழி வளர்ப்பு விவசாயிகள் வெள்ளை கழிச்சல் நோய்க்கு எதிராக கோழிகளுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும். மேலும் வெள்ளை கழிச்சல் நோய் நாட்டுக்கோழிகளுக்கு வராமல் தடுக்க தடுப்பூசியுடன், மூலிகை மருத்துவ முறைகளையும் பயன்படுத்தலாம்.

கோடை காலத்தில் பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற திட பொருட்களின் அளவை நிலை நிறுத்த தீவனத்தில் சோடா உப்பை கோடை காலம் முடியும் வரை கொடுக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் தினசரி 70 லிட்டருக்கும் மேல் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

மேலும் படிக்க

Tree Bike உருவாக்கிய கர்நாடக விவசாயி: அதுவும் குறைந்த செலவில்!

உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)