மனிதகுலத்தின் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டுமானால், இயற்கை விவசாயமே சிறந்தது என்பது, அண்மைகாலமாக எழுந்துள்ள ஒருமித்தக் குரலாகும். இதனை உணர்ந்துகொண்ட திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும், இயற்கை விவசாயத்தில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.
அந்த வகையில், ஏற்கனவே இயற்கை விவசாயப் பண்ணையை செவ்வனே நடத்தி வருகிறார் நம் அனைவருக்கும் பரிட்சையமான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராக விளங்கி வந்த தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார்.
தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வரும் அவர் விவசாய பண்ணை வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜாபுவாவிலிருந்து சுமார் 2,000 கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளை வாங்கியுள்ளார்.
இது அந்த மாநிலத்தின் ஒரு வகையான நாட்டுக்கோழியாகும். கடக்நாத் கோழிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. ஏனெனில், இந்த வகை கோழிகளில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது.
விளையாட்டு வீரர்களின் உணவு முறையில் இந்த கோழி இறைச்சி இருக்க வேண்டும் என ஆராச்சியாளர்கள் பிசிசிஐ-க்கு வலியுறுத்தியிருந்த நிலையில், டோனி கோழிவளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். தனது சொந்த மாநிலமான ராஞ்சியில் டோனி ஏற்கனவே இயற்கை முறையில் விவசாயம் நடக்கும் பண்ணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...