மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 May, 2022 7:26 AM IST

விவசாயி ஒருவர் வளர்த்துவரும் கோழி, முந்திரி வடிவில் முட்டை இடுவது மற்றவர்களையும், கால்நடை ஆர்வலர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

முட்டையில் பல வகைகள் உண்டு. பல ரகங்கள் உண்டு. ஆனால் உடல்நலத்திற்கு உத்திரவாதம் அளிப்பது என எடுத்துக்கொண்டால், அதில் கோழி முட்டையின் பங்கு இன்றியமையாதது. அப்படிப்பட்ட கோழி முட்டையின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது? அப்படியொரு விசித்திரம் இங்கு நிகழ்ந்திருக்கிறது.

வியப்பில் மக்கள்

கர்நாடகாவில் உள்ள பெல்தங்கடி தாலுகாவின் லைலா அருகே முந்திரி வடிவ கோழி முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள லைலாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த், இவருக்குச் சொந்தமான கோழிதான் மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம், வித்தியாசமான வடிவத்தில் முட்டைகளை இட்டுவருகிறது.

இந்த முட்டைகள், நாம் சாப்பிடும், முந்திரியை ஒத்த வடிவத்தில் உள்ளன. பார்ப்பதற்கு வியப்பாகக் காணப்படுகிறது. முந்திரி வடிவிலான இந்த முட்டையை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கோளாறு

முதல் ஓரிரு நாட்களில், முட்டையின் வடிவத்தைப் பார்த்து அச்சமடைந்த விவசாயி, உடனடியாக கால்நடை மருத்துவரிடம் கொண்டுசென்று விசாரித்தார்.அதற்கு, இந்தக் கோழியில் வயிற்றில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என கால்நடை மருத்துவர் பதில் அளித்தார். ஆனால் தொடர்ச்சியாக அதேபோல் முந்திரி வடிவ முட்டைகளைக் கோழி இட்டுவருகிறது.

எனவே இந்த முட்டையின் வடிவத்தில் ஏற்பட்ட மாற்றம் ஏன்? இந்த முட்டையைச் சாப்பிடுவதால், உடல் ரீதியான பாதிப்பு ஏதும் ஏற்படுமா? என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க...

முழு முட்டை Vs வெள்ளைக்கரு – எது ஆரோக்கியமானது?

மாட்டுக் கொட்டகைக்கு 100 % மானியம்- விபரம் உள்ளே!

English Summary: Egg-laying chicken in cashew form!
Published on: 25 May 2022, 04:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now