நாமக்கல்லில் இனி முட்டை விலை வாரத்தில் 3 நாட்களில் நிர்ணயம் செய்யப்படும் என என்.இ.சி.சி. தலைவர் டாக்டர் செல்வராஜ் (NECC)அறிவித்துள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 23-ந்தேதி தினமும் முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இந்த முடிவுக்கு தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் ஆகிய இரு சங்கங்களும் ஆதரவு அளித்தன. ஆனால் ஒரே வாரத்தில் தினசரி முட்டை விலை நிர்ணயமும் காணாமல் போய்விட்டது.
இதைத்தொடர்ந்து முட்டை விலையை திங்கள், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் மட்டுமே இனி நிர்ணயம் செய்யவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளளது. இதன் மூலம் முட்டை விற்பனையில் பண்ணையாளர்கள் லாபம் பெற வேண்டும். குறைந்த விலையில் மக்களுக்கு முட்டை கிடைக்க வேண்டும் என்பதில் என்.இ.சி.சி. உறுதியாக இருக்கிறது.
இதற்காக அவ்வப்போது முட்டை விலை நிர்ணயத்தில் சில மாற்றங்களை என்.இ.சி.சி. சேர்மன் டாக்டர் செல்வராஜ் ஏற்படுத்துகிறார். ஆனால் பண்ணை நிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது.
முட்டை வியாபாரிகள், மற்ற மண்டலங்களை ஒப்பிட்டு என்.இ.சி.சி. விலையில் இருந்து குறைத்து (மைனஸ் விலை) முட்டையை வாங்கி செல்கிறார்கள். அதிகப்படியான முட்டை உற்பத்தி (தினமும் சுமார் 4 கோடி) நாமக்கல் பண்ணைகளில் நடைபெறுவதால், என்.இ.சி.சி.யின் அறிவிப்புகளை பண்ணையாளர்கள் முழுமையாக பின்பற்றுவதில்லை. இதன் காரணமாக என்.இ.சி.சி. எடுக்கும் முடிவுகள் ஒரே வாரத்தில் திரும்ப பெறப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க...
நாம் ஏன் முட்டை சாப்பிட வேண்டும்? விளக்கம் உள்ளே!
விலை மதிப்பற்றது வெங்காயம் - ஏன் தெரியுமா?