Animal Husbandry

Saturday, 18 June 2022 11:25 PM , by: R. Balakrishnan

Cow dung export

ராஜஸ்தானில் இருந்து குவைத் நாட்டுக்கு, 1.92 லட்சம் கிலோ மாட்டுச் சாணம் சமீபத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகள் இயற்கை விவசாய முறைக்கு திரும்பியுள்ளன. மேற்காசிய நாடான குவைத்தும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், அங்குள்ள ஒரு நிறுவனம் நம் நாட்டின் ராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூரில் உள்ள நிறுவனத்திடம் இருந்து மாட்டுச்சாணம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது.

மாட்டுச் சாணம் ஏற்றுமதி (Cow Dung Export)

முதற்கட்டமாக, 1.92 லட்சம் கிலோ மாட்டுச்சாணம் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இயக்குனர் பிரசாந்த் சதுர்வேதி கூறுகையில், “எங்கள் நிறுவனத்தின் கோசாலையில் இருந்து சுங்கத்துறையினரின் மேற்பார்வையில் மாட்டுச்சாணம் உருளைகளில் அடைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது,” என்றார்.

மாட்டுச்சாணம் ஏற்றுமதி பற்றி இந்திய இயற்கை விவசாய பொருட்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் அதுல் குப்தா கூறியதாவது: நம் நாட்டில் இருந்து மாட்டுச்சாணத்தை குவைத் வாங்குவது இதுவே முதன்முறை. உலக அளவில் பல நாடுகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் செலுத்துவதால், இங்கிருந்து மாட்டுச்சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

கடந்த 2020 - 2021ம் ஆண்டில் மட்டும் 27 ஆயிரத்து 155 கோடி ரூபாய் மதிப்புள்ள மாட்டுச்சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குவைத்தில் பசுஞ்சாணத்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதை உரமிடுவதால் பேரீச்சை விளைச்சல் அதிகரித்து, திரட்சியான பழங்கள் கிடைப்பதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாலத்தீவு, மலேஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து பசுஞ்சாணம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க

இந்த நாட்டில் ‌கால்நடை வளர்ப்போருக்கு வரிவிதிப்பு காரணம் என்ன தெரியுமா?

தரிசு நிலத்தில் மகசூல் தரும் முந்திரி விவசாயம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)