Animal Husbandry

Thursday, 09 May 2019 03:22 PM

நிறைய வகையான மீன்கள் இடம் மாறிக்கொண்டே இருக்கும். மீன்களின் நெடுந்தூர பயணம் ஒரு மீட்டர் முதல் ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்லும். மீன்கள் எப்பொழுதும் உணவுக்காகவும் மற்றும் இனப்பெருக்கத் தேவைக்காக இடம் மாறும்.

வகைபடுதல்

  1. போடாமொட்ரொமயுஸ்: (ஓடும் ஆறு / நதி) மீன்கள் நன்னீரில் மட்டும் இடம்பெயர்தல்
  2. ஓசன்ட்ரொமயுஸ்: (கடல்) மீன்கள் உவர்நீரில் மட்டும் இடம்மாறுதல்
  3. டையாட்ஹாமயுஸ்: (நடுநிலை) மீன்கள் நன்னீர் மற்றும் உவர்நீரில் இடம்மாறுதல்
  • அனாட்ரொமயுஸ்: மீன்கள் கடலில் வாழும் ஆனால் நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும்
  • கட்டாட்ரொமயுஸ்: மீன்கள் நன்னீரில் வாழும், ஆனால் உவர்நீரில் இனப்பெருக்கம் செய்யும்
  • ஏம்பிட்ரொமயுஸ்: மீன்கள் நன்னீர் மற்றும் உவர் நீரில் மாறி வாமும். ஆனால் இனப்பெருக்கம் செய்யாது

உணவு தேடும் மீன்கள்

மீன்கள் பெரும்பாலும் உணவு,முட்டையிட மற்றும் மீன் குஞ்சுகள் வளர இடம் மாற்றம் செய்யும். மீன் கூட்டங்கள் எப்பொழுதும் இந்த மூன்று தேவைக்காக மட்டும் இடம் மாற்றிக்கொள்ளும். இந்த மூன்று தேவைகளை மூன்று திசைகளில் அமைத்துக் கொள்ளும். உதாரணத்திற்கு தென் திசையில் முட்டையிட்டால் வடக்கு திசையில் குஞ்சுகளை வளர்க்கும் இதற்கு உணவு முக்கோணத்தீவில் அமைத்துக்கொள்ளும். உணவுத் தேடும் மீன்களுக்கு இந்த முக்கோன பயணம் மிகவும் முக்கியம் ஏனென்றால் அதற்கே அதனுடைய குஞ்சுகளை அடையாளம் தெரியாமல் உண்டு விடும்.

அதிகளவில் இடம்பெயர்க்கும் இனங்கள், கடல் சட்டத்தின் ஐக்கிய தேசிய கூட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.பட்டியலில் உள்ள இனங்கள்: சூரைமீன் இனங்கள், வாவல் / வவ்வல் மீன், மார்லின், மயில்மீன், ஸ்பார்ட் மீன் மற்றும் டால்பின் இனங்களாகும். இந்த வகையான மீன்கள் நெடுந்தூரம் பயணம் செய்யும். மீன்கள் 200 மையில் தூரத்திற்குள்ளும் அல்லது தூரத்திற்கு வெளியவும் பயணம் செய்யும்.மிதவை இனங்கள் பெரும்பாலும் கடற்கரை பகுதியில் பயணம் செய்யும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)