மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 May, 2019 5:43 PM IST

மீன்பிடிப்பு வலைகள்

அதிகளவில் மீன்களை பிடிக்கவும் மற்றும் அதிகளவில் மீன்கள் தேவைப்படும் போது தீவிர அல்லது நேரடி மீன்பிடிப்பு முறை ஏற்றதாகும். ‘தீவிர’ என்றால் மனிதன், விலங்கு மற்றும் இயந்திர வலு மூலம் மீன் வலைகளை நேரடியாக தண்ணீரில் வீசி மீன் பிடிப்பது என்றாகும். பல வேலைகளில் ‘மிதமான’ மீன் பிடிப்பு வலைகளை விட (செவுள் வலை மற்றும் பொறி) தீவிர மீன்பிடிப்பு வலைகளின் ஆற்றல் திறன் அதிகமானது.

குத்தீட்டி

இந்த முறையான மீன்பிடிப்பு உயர்ந்த வகையான மீன்களை பிடிக்க உதவும். அதாவது சுவார்ட் மீன் மற்றும் சூரை மீன்கள். குத்தீட்டி குறிப்பிட்ட மீன் வளர்ப்பில் மட்டும் பயன்படுத்தலாம். முன்னதாகவே மீனின் அளவு, வயது என தெரிந்து அதன் பின் பிடிக்க வேண்டும்.

ஓடு கயிறு வலை

கயிறு நுனியில் கொக்கி வைத்து மீன்களை கவருதல் ஓடு கயிறு வலையாகும். இந்த மீன்பிடிப்பு முறையை பயன்படுத்தி அதிக தரமுள்ள மிதவை மீன்களை பிடிக்கலாம். (எ.கா) கெண்டை, உழி மற்றும் சால்மோன் மீன்கள்.

சுருக்குவலை

சுற்றியுள்ள மீன் கூட்டங்களை பெரிய மீன் வலையினால் பிடித்து வலையை சுருக்கிக் கொள்ளும் இந்த சுருக்குவலை. இந்த வலையின் மூலம் நிறைய மீன்கள் பிடிப்படும் சூரை மீன்கள், கானாங்கத்தி என பெரிய வகையான மீன்கள் பிடிப்படும்.

கோல் இழு வலை

இது ஒருவகையான இழு வலை, வலையின் வாயிலை ஒரு கோலின் ஒவ்வொரு முனையிலும் சேர்த்துவிட வேண்டும். அதை கடலின் மேல் போகும் படி செய்ய வேண்டும். இழு வலை பொருந்தியதும் அதனுடன் அடிமட்டச் சங்கிலி மற்றும் கனச்சங்கிலியையும் ஆழத்திற்கு ஏற்றவாறு பொருத்தினால் இன்னும் அதிக மீன்கள் கிடைக்கும். இந்த வலை இழுவையினால் மீன்களை கீழிருந்து மேலே இழுத்து வலையிள்  பிடிபடுகிறது. நவீன கோல் இழு வலையின் அளவு 4-12செ.மீ மற்றும் கோல் நீளம் இவை அனைத்தும் உபயோகிக்கும் இயந்திரத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

அடிமட்ட பலகை இழு வலை

கீழ் இழு வலை

அடிமட்ட பலகை (அல்லது) கீழ் இழுவலை மிகவும் பெரியது. இது கடல்மேல் இழுத்து செல்லும் வலை. வலையின் முன்பக்கம் இறகை போன்ற ஆட்டர் பலகையில் பொருந்தியுள்ளது. மீன்கள் கூட்டமாக பலகையின் நடுவில் வரும் அதன்பின் வலைக்குள் மாட்டிக்கொள்ளும். கடைசியாக பொனல் மூலம் அனைத்து மீன்களையும் எடுத்துக்கொள்ளலாம்.

மிதவை இழுவலை

கடல் மேலிருந்து கடல் அடிமட்டம் வரை உள்ள ஆழத்தில் வரிப்பது மிதவை இழுவலை ஆகும். நீந்தும் மீன், மீன்திரளிளுள்ள  மீன் மற்றும் கடற்பரப்பு மீன்களை பிடிக்க உதவுகிறது மிதவை இழுவலை. அதாவது கொடுவா, கானாங்கத்தி, கெரிங் ஆகிய மீன்களை பிடிக்க மிதவை இழுவலை பயன்படுகிறது. வலையின் அளவுக்கு ஏற்றது போல் மீன்களை பிடிக்கலாம் பிடித்த மீன்களை பம்பு உதவியுடன் படகுக்கு இழுத்துக் கொள்ளலாம். நடுகடலில் செல்லும்போது இழு பலகைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். வலையின் நீலம் 1/2 மையில் தூரம், அகலம் 1/4 மையில் என இருந்தால் அதிக அளவிலான மீன்கள் கிடைக்கும்.

சூழ் வலை

சூழ்வலை ஒருவகையான கடல் அடிமட்ட மீன் பிடிப்பு வலையாகும். இதல் காட் மீன், ஆழ்கடல் மீன் மற்றும் தட்டை மீன் இனங்கள் போன்ற வகையான மீன்களை பிடிக்கலாம். இந்த வலையில் கயிறு சுற்றியும் இருக்க நடுவில் வலையிருக்கும். ஒரு வலைப்பிடிப்பில் மீன்கள் அனைத்தும் பிடிப்படும். இது ஒரு எளிமையான மீன்பிடிப்பு வலையாகும், மற்ற வலைகளை விட இந்த வலை மீன்பிடிப்பிற்கு குறைந்த எரிபொருளே தேவைப்படும் மற்றும் தரமுள்ள மீன்கள் உற்பத்தியாகும்.

 

English Summary: fishing nets: types of nets : fisheries : fishing technology
Published on: 13 May 2019, 04:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now