சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 1 December, 2018 5:43 PM IST

இஞ்சியை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்கினாலும் குறிப்பாக இஞ்சி குருத்துத் துளைய்பான், கிழங்கு ஈ மிக அதிகமாக தாக்கி பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன.

குருத்துத்துளைப்பான்

முட்டைகளிலிந்து வெளிவரும் புழுக்கள் முதலில் இலையின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டி உண்ணுகின்றன. பின்னர் தண்டில் துளையிட்டு அதன் வழியாக புழு உள்ளே நுழைந்து தண்டின் உட்பகுதியைத் தின்று கொண்டே குருத்தின் அடிப்பகுதியை அடையும். குருத்தின் அடிப்பகுதியைத் தின்பதால் குருத்து வாடி காயத் தொடங்கும். குருத்தின் கீழ், புழுவின் கழிவுப் பொருட்கள் கொண்ட துளைகள் காணப்படுவது தாக்குதலின் அறிகுறியாகும். இதனால் கிழங்கு விளைச்சல் பாதிக்கப்படுகின்றது. இவை மஞ்சள், கொய்யா, மா, மாதுளை, ஆமணக்கு, புளி, கீரை வகைச் செடிகள், சோளம், மல்பெரி, கோகோ போன்ற பயிர்களையும் தாக்கும்.

வளர்ச்சிப்பருவம்

தாய் ஈயின் உடல் கருப்பு நிறத்தில் சிறியதாக இருக்கும். சிறிய சாம்பல் நிறப்புள்ளிகள் இறக்கை முழுவதும் காணப்படும். பெண் ஈ, முட்டைகளை மண்ணிற்கு அருகில் உள்ள தண்டுகளில் இடும். இந்த முட்டைகள் இரண்டு முதல் ஐந்து நாள்களில் பொரிக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழு தண்டினுள் குடைந்து சென்று கிழங்கை உண்ணும். புழுப்பருவ காலம் 13 முதல் 18 நாள்கள் ஆகும். கூட்டுப் புழு பருவம் 10 முதல் 15 நாள்கள் ஆகும். முட்டையிலிருந்து முதிர்ந்த பூச்சியாக உருமாற சுமார் நான்கு வாரங்கள் ஆகும்.

மேலாண்மை முறைகள்

  1. பூச்சி தாக்காத நல்ல விதைக்கிழங்குகளைத் தேர்வு செய்து சேமிக்க வேண்டும்.
  2. விதைக் கிழங்குகளை டைக்குளோரோவாஸ் 2 மி.லி. அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1.5 மி.லி. ஒரு லிட்டர் தண்ணிரில் கலந்து அக்கரைசலில் நனைய வைத்து நிழலில் உலர்த்திய பிறகு நடுதல் வேண்டும்.
  3. தாக்கப்பட்ட குருத்து, கிழங்கைச் சேகரித்து அழிக்க வேண்டும்.
  4. மோனோகுரோட்டோபாஸ் 2 மி.லி. அல்லது. குளோர்பைரிபாஸ் 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணிரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இஞ்சியைத் தாக்கும் குருத்து துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்தி அதிக விளைச்சலைப் பெறலாம்.

 

English Summary: Ginger pest management
Published on: 01 December 2018, 05:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now