மழைக்காலங்களில் ஆடுகளில் குடற்புழுக்களால் ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் மேய்ச்சல் நிலங்களில் இளநிலை பருவ புழுக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது. செம்மறி, வெள்ளாடுகளில் உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
சாண பரிசோதனை (Dung Test)
ஆடுகளுக்கு சாண பரிசோதனை செய்து உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் குடற்புழு நீக்கம் செய்யலாம். சமீபகாலமாக பெய்து வரும் மழையின் காரணமாக வயல், வரப்பு, தரிசு நிலங்களில் பல்வேறு வகையான புற்கள் வளர்ந்து காணப்படுகின்றன. இவற்றை கால்நடைகள் உட்கொள்வதால், வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
குடற்புழு நீக்கம் (Deworming)
கிராமப்புறங்களில் 5 முதல் 10 ஆடுகளை வளர்த்து வாழ்பவர்கள் அரசு கால்நடை மருந்தகம், மருத்துவமனைகளில் இலவச குடற்புழு நீக்க மருந்துகளை வாங்கலாம். மழைக்காலத்தில் வழக்கமாக இந்த சிகிச்சை அவசியம். தற்போது ஆடியில் மழை பெய்வதால் புது புற்கள் அதிகம் வளர்ந்து செரிமான தாக்குதலை ஏற்படுத்தும். குட்டி பிறந்தது முதல் 6 மாதம் வரை மாதந்தோறும் குட்டிகளுக்கு மருந்து கொடுக்க வேண்டும். 6 முதல் ஓராண்டு வரை 2 மாதத்திற்கு ஒரு முறையும் வளர்ந்த ஆடுகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறையும் மருந்து கொடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட கால்நடைகள் தீவனம் உட்கொள்ளாமல் சோர்வடைந்து வயிறு உப்புசமாக காணப்படும். இந்த பாதிப்பு கண்ட கால்நடைகளுக்கு முறையான தீவன மேலாண்மை உத்திகளை கையாள்வதன் மூலம் எளிதாக குணப்படுத்தலாம். தீவிரமாக பாதித்த கால்நடைகளுக்கு கால்நடைகளுக்கு கால்நடை டாக்டரை அணுகி முறையான சிகிச்சை அளிக்கவேண்டும். அரசு கால்நடை மருந்தகம், மருத்துவமனைகளில் பி.பி.ஆர். தடுப்பூசி உள்ளது. ஆடுகளுக்கு செலுத்த மறக்கக்கூடாது.
சிவக்குமார்,
கால்நடை டாக்டர்,
விளாச்சேரி,
மதுரை
shivva2003@yahoo.co.in
மேலும் படிக்க
கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்கள்: மூலிகை வைத்தியத்தில் தீர்வு!
பசு கோமியத்தை வாங்கும் மாநில அரசு: கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி!