மாநிலம் முழுவதும் விரைவில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின்கீழ் கோமாரி நோய்த்தடுப்பு மருந்து 100 சதவீத மானியத்தில் இலவசமாக ஒன்றிய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.
தடுப்பூசிப்பணி நிறைவு
ஆண்டு தோறும் இருமுறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த்தடுப்பூசி போடப்படுகிறது.
தற்போது, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 100 சதவீதம் கோமாரி நோய்க்கான தடுப்பூசிப்பணி நிறைவடைந்துள்ளது.
கோமாரித் தடுப்பூசி
மேலும், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களான தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தென்காசி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கோமாரி நோய் அதிகம் தாக்கம் ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் அளவில் கோமாரி தடுப்பூசி கால்நடைகளுக்குப் போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து
அனைத்து மாவட்டங்களுக்கும் கோமாரி தடுப்பூசி மருந்து பெற்று வழங்கத் தமிழக அரசின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசி முகாம் (Vaccination Camp)
விரைவில் கோமாரி தடுப்பு மருந்து மத்திய அரசு மூலம் பெறப்பட்டு கோமாரி நோய்த்தடுப்பு மருந்து முகாம்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த வாய்ப்பு கா
மேலும் படிக்க...
இதை உற்பத்தி செய்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம்!
விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!