Animal Husbandry

Friday, 13 November 2020 08:37 AM , by: Elavarse Sivakumar

Credit : Patrikai

திருச்சி மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தில் பங்கேற்க, கிராமப்புற விவசாயிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிதியாண்டில், திருச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக 35 தொழில் முனைவோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒன்றியத்துக்கு 2 அல்லது 3 பேர் தேர்வு செய்யபடுவர்.

தகுதிகள் (Qualifications)

  • தேர்வாகும் பயனாளிகள் திருச்சி மாவட்டத்திலுள்ள கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

  • கோழி வளர்ப்பில் அனுபவம் மற்றும் ஆர்வமுள்ள விவசாயிகளாக இருக்க வேண்டும். சுமார் 1000 கோழிகள் பராமரிக்கும் வகையில் கோழிப் பண்ணை அமைக்க சொந்தமாக குறைந்தபட்சம் 2500 சதுர அடி இடமும், கோழி வளர்ப்புக்குத் தேமையான தீவனம் மற்றும் தண்ணீர்க் குவளைகள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

  • கடந்த 2012 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில், கோழி அபிவிருத்தித் திட்டத்தில் பயனடைந்தவர்களாக இருக்கக்கூடாது.

  • தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க வேண்டும்.

  • ஒவ்வொரு பயனாளிக்கும் 1000 எண்ணிக்கையில் பாலினம் பிரிக்கப்படாத, இரட்டைப் பயன் (இறைச்சி மற்றும் முட்டை) நாட்டுக் கோழிக் குஞ்சுகளை ரூ.30,000க்கு கொள்முதல் செய்த பின்னர் உரிய பின்னேற்பு மானியமாக ரூ.15,000 பயனாளியின் வாங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

  • அதேபோல் பயனாளிகள் ரூ.45,000க்கு கொள்முதல் செய்யும் 1500 கிலோ கோழித் தீவனத்துக்கான ரூ.22,500 தொகையும் ரூ.75.000க்கு கொள்முதல் செய்யப்படும் கோழிக் குஞ்சு பொரிப்பான் இயந்திரத்துக்கு ரூ.37,500 தொகையும் பின்னேற்பு நேரடி மானியங் களாக பயனாளியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

  • இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள், தங்கள் அருகாமையிலுள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவர் களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

தகவல்

சு.சிவராசு 

திருச்சி மாவட்ட ஆட்சியர்

மேலும் படிக்க...

அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் மெத்தனம் - பட்டுக்கூடு உற்பத்தியாளா்கள் கவலை!

PMFBY :பயிர் காப்பீடு பதிவு செய்ய நவ.30வரை கெடு!

மீன் வளர்க்க காசு - வாங்க நீங்க ரெடியா!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)