நாட்டுக் கோழிகளை கூண்டு முறையில் வளர்த்தால் காகம், பருந்து, வல்லூறுகளால் கோழிக் குஞ்சுகளுக்கு ஏற்படும் இறப்பைத் தவிர்க்கலாம். முறையான வளர்ப்பில் 100க்கு 95 குஞ்சுகளுக்கு மேலாக வளர்த்து விற்பனை செய்ய முடியும். கூண்டு முறையில் இறப்பு 4 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கும். சுகாதாரமான முறையில் தீவனம், தண்ணீர் அளிக்க முடியும். கோழிகள் நோயின்றி வளரும். தடுப்பூசி செலுத்துவதும் எளிது.
நாட்டுக்கோழி வளர்ப்பு (Poultry farming)
ஏழாவது நாள் மற்றும் 8வது வாரத்தில் வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு தடுப்பூசி செலுத்தினால் நோய்த் தாக்காமல் ஆரோக்கியமாக வளர்க்க முடியும். தேவைப்படும் போது கோழிகளின் அலகை வெட்டுவதுடன், வெளிப்புற ஒட்டுண்ணிகளை நீக்குவதும் எளிது. குறைந்த தீவனம் உட்கொண்டு அதிக உடல்எடை பெறும். தேவையான சத்துக்கள் அடங்கிய அடர்தீவனம் அளித்தால் மூன்று மாதங்களில் சராசரியாக ஒரு கிலோ உடல் எடை அதிகரிக்கும். இந்த உடல் எடை பெறுவதற்கு 3 முதல் 3.5 கிலோ தீவனம் உட்கொள்ளும்.
6 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட நான்கு கூண்டுகளாக பிரித்து ஒவ்வொன்றிலும் தலா 10 கோழிகளை ஒன்றரை கிலோ உடல் எடை அடையும் வரை வளர்க்கலாம். கூண்டின் கீழேயும் இதேபோல் கம்பி வலை அமைத்து 4 அறைகளாகப் பிரித்தால் 80 கோழிகளை குஞ்சு பொரித்தது முதல் 5 மாதங்கள் வரை வளர்க்கலாம்.
எச்சமானது கூண்டின் அடிப்புற தட்டில் விழுவதால் சுத்தப்படுத்துவதும் எளிது. ஒரே கூண்டில் 2 முதல் 3 அடுக்குகள் வரை வைத்து நாட்டுக் கோழிகளை வளர்க்கலாம். மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் கிராமம், நகர்ப்புறங்களில் வளர்த்து நல்ல லாபம் பெறலாம்.
உமாராணி, பேராசிரியர் கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,தேனி
hamleshharini@gmail.com
மேலும் படிக்க
150 கி.மீ பயணம் செய்ய 10 ரூபாய் போதும்: 6 பேர் செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்த இளைஞர்!
யூரியா வாங்க ரூ.2700 மானியம்: விவசாயிகளுக்கு உதவும் மத்திய அரசு!