மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 May, 2020 2:08 PM IST

 பால் உற்பத்தியில் உலக அரங்கில் முதல் இடத்தில் இருக்கும் நாடு எது என பலரிடம் கேட்டால்? நிச்சம் பலருக்கு எந்த நாடு என்பது தெரியாது, அதிலும் நமது இந்திய நாடு தான் என்றால் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். அதற்கு காரணம் நமது நாட்டில் தற்போது உள்ள நாட்டு மாட்டு மற்றும் மாட்டின் உற்பத்தித்திறன் மிகவும் குறைவு என்பது தான். சரி,  இப்படி இருக்க நமது நாடு எப்படி பால் உற்பத்தியில் முதல் இடத்தில் பெற முடிந்தது? என்ற சந்தேகப் பார்வை இருக்கத்தான் செய்கிறது அல்லவா!!.  மேற்கத்திய நாடுகளில் உள்ள கறவை மாடுகளுடன் ஒப்பிடும் பொழுது நமது நாட்டில் தற்போது உள்ள கலப்பின  பசுவின் உற்பத்தித்திறன் மிகவும் குறைவு. “வெண்மை புரட்சிக்கு பிறகு நமது நாட்டின கறவை மாடுகளில் அயல் நாட்டு கலப்பின பொலிமாட்டின் உயிரணுவைக்கொண்டு கருத்தரித்தலுக்கு உட்படுத்தப்பட்டு கலப்பின பசு உருவாக்கப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட கலப்பின பசுவின் உற்பத்தித்திறனானது உயர்ந்ததன் வாயிலாக இந்நிலையை அடைந்தோம்.

அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பாலானது அதிக எண்ணிக்கையிலான மாடுகளிலிருந்து பெறப்படுவதால் அவற்றின் தரம் சீராக ஒரு மாதிரி இருப்பதில்லை. இயற்கையாகவே பாலின் காத்திருக்கும் திறன் மிகக் குறைவு, இதுவே அது எளிதில் கெட்டுவிடும் தன்மைக்கு காரணம் .  நமது நாட்டின் உட்புற சாலை வசதிகள், இடைத்தரகர்கள், பால் பதனிடும்/குளிரூட்டும் வசதி இல்லாமை, எளிதில் சந்தைப்படுத்தும் வாய்ப்பு இல்லாமை மற்றும்  மதிப்புகூட்டுதல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை போன்றவை  அயல் நாட்டிற்கு சந்தைபடுத்தும் வாய்ப்பையும்  பாதிக்கின்றது. ஆகவே கறவை மாடு வளர்க்கும் பண்ணையாளர்கள் மற்றும் இடையில் கையாழுபவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தரமான பால் உற்பத்தி செய்து பயன்பெற வேண்டுகின்றோம்.

தூய்மையான பால் உற்பத்தியில்    பால் கறக்கும் இடம், கறவை மாடு, பால் கொள்முதல் செய்யும் இடம் மற்றும் பால் கறப்பவர் ஆகியவற்றின் தூய்மை மற்றும் சுகாதாரம் மிகவும் முக்கியம். மேலும் விரைவில் பால் அதன் தூய்மையான தரத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் காலம் வெகுதூரமில்லை

பால் கறக்கும் இடம்/சூழல்  

  • பால் கறக்கும் இடத்தை தூய்மையாக வைத்திருப்பது நமது முதல் நோக்கமாகும்.
  • மாடுக்கொட்டகை மண்தரையாக இருப்பின் பால் கறக்கும் இடத்தில் தூசிகள் பறக்காமல் இருக்க, பால் கறக்கும் முன்பு நீர் தெளிப்பது அவசியம் அதன் பின் தரையை கூட்டி சுத்தம் செய்யலாம்.
  • பால் கறக்கும் இடத்திற்கு அருகாமையில் எந்த வித புகை மூட்டமோ (அ) துர்-நாற்றமோ இருக்கக்கூடாது, சில நேரங்களில் பால் கறக்கும் பொழுது புகை மூட்டம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.                              
  • பால் கறக்கும் நேரங்களில் மாட்டிற்கு ஊறுகாய்ப்புல் மற்றும் பிற ஈரப்பதம் மிகுந்த தீவனங்களை கொடுப்பது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.      
  • மாட்டுக்கொட்டகையை சுற்றிய பகுதிகளை கழிவுநீர்/சாக்கடை தேங்காதவாறு பார்த்துக்கொள்வதுடன், போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் ஆகியவை நிச்சயம் கிடைக்கச்செய்ய வேண்டும்.
  • வெளியாட்களை தேவையின்றி பண்ணையின் உள்ளே அனுமதிக்கக் கூடாது.
  • சுற்றுச்சூழலை கிருமிநாசினிக்கொண்டு அவ்வப்போது தூய்மை செய்ய வேண்டும்.

பால் கேன்

  • பால் கொள்முதல் செய்யும் நிறுவனம் பால் கேனின் சுத்தத்தை பல்வேறு நிலைகளில் உறுதி செய்ய வேண்டும்.
  • பால் கேனை சுடுதண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு சோப்பு தண்ணீர் கொண்டும், அதனைத்தொடர்ந்து மிதமான காரக்கரைசலில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
  • பால் கேன் சரியான நேரத்திற்குள் குளிரூட்டும் நிலையத்திற்கு வருவதை உறுதிசெய்ய வேண்டும்.
  • பால் கேனின் மூடி, அடிப்பகுதி கண்ணிற்கு தெறியாத பிற பகுதிகளில் பூஞ்சை காளாண் மற்றும் பிற கரைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • சில நேரங்களில் பால் கெட்டுவிடுவதை காணலாம் ஆகையால் அந்த கேனை தனிக்கவனத்துடன் தூய்மை செய்ய வேண்டும்.
  • பால் வண்டி வரும் நேரத்திற்கு ஏற்றவாறு பால் கறவை நேரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.
  • பால் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளால் கொண்டு செல்லும் கேனை தினமும் தூய்மை செய்து, பாலின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

தீவன மேலாண்மை

  • தரமான தீவனம் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். (உலர்/அடர்/பச்சை)
  • முதல் தர சரிவிகிதத் தீவனம் கொடுப்பதன் மூலம் தரமான பால் உற்பத்தி செய்யலாம் என்பதை தாரக மந்திரமாக கொள்ள வேண்டும்.
  • சரியான விகித்தில் தண்ணீர் கொடுக்க வேண்டும், இல்லையேல் எப்பொழுதும் தன்ணீர் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.
  • மாட்டிற்கு அரிசி, அரிசி சார்ந்த எந்த பொருளையும் கொடுக்கக்கூடாது.
  • அழுகிய/ நம்மால் உண்ணத்தகாத எந்தப்பொருளையும் மாடுகளுக்கு கொடுக்க கூடாது,
  • மாட்டிற்கு எந்த வித தொழிற்சாலை கழுவுகளையும் கொடுக்கக்கூடாது. (உ-தா): பீர் தொழிற்சாலை கழிவுகள், பிஸ்கட் தொழிற்சாலை கழிவுகள், மற்றும் சோளமாவு தொழிற்சாலை கழிவுகள் ஆகிய எந்த வகை கழுவுகளையும் கொடுக்கக்கூடாது.
  • பால் கறந்த பின்பு கன்றை பால் ஊட்ட விடுவதை தவிர்ப்பதன் மூலம் மடிநோய் வருவதற்கான வாய்பை குறைக்கலாம். அதற்காக, பால் கறந்த பின்பு பசுந்தீவனத்தை மாட்டிற்குக் கொடுக்கலாம்.
  • பால் கறந்து முடித்த அரை மணிநேரத்திற்குள் கொள்முதல் நிலையத்திற்கு செல்ல வேண்டும். கோடைகாலத்தில் கறவை மாட்டை நிழலில் கட்டுவது சிறந்தது.

கறவை மாடு

  • பால் மடியை கிருமி நாசியைக் கொண்டு சுத்தம் செய்தல்.
  • பால் மடியை பால் கறக்கும் முன் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி தூய்மையான துணிக் கொண்டு துடைக்க வெண்டும்.
  • பால் காம்பை பால் கறந்த பிறகு அயோடின் (iodine) கரைசலில் நனைக்க வேண்டும்.
  • பால்  கறந்த பின்பு தீனி வைக்க வேண்டும். 
  • நோய்யுற்ற மாட்டினை தனியே பிரித்து பராமரிப்பது மிகவும் சிறந்தது.
  • மடிநோய் வந்த மாட்டை கடைசியாக கறப்பது சிறந்த பராமரிப்பாகும்.
  • தேவையெனில் பால் கறக்கும் முன் மாட்டின் கால் மற்றும்  வாலை கட்டுதல்.

பால் கொள்முதல் செய்யும் இடம்                       

  • பால் கேனின் சுத்தத்தை உறுதி செய்தல்.
  • பால் மாணி மற்றும் LR-ஜாரை தூய்மையாக வைத்திருத்தல். 
  • கலப்படமற்ற நிலையில் பால் கொடுத்தல்.
  • நோய்  தொற்றை  தவிர்க்க  பாதுகாப்பு ஆடை அணிதல் (குல்லாய்  & முகமூடி).
  • பால் சேகரிக்கும் தட்டு (டிரே) கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல்.
  • பால் மாணி மற்றும் பால் வடிகட்டியை  தவறாமல் பயன்படுத்துதல்.
  • பால் மாதிரியை சரியாக எடுத்து அனுப்புதல்.
  • தாமதம் இல்லாமல் பால் வண்டியை அனுப்புதல்.

பால் கறப்பவர்      

  •  பால் கறப்பவர் எந்த வித தொற்று நோய்க்கும் ஆட்படாமல் இருப்பது மிகவும் அவசியம்.
  • பால் கறப்பவர்  நோய்  தொற்றை  தவிர்க்க  பாதுகாப்பு ஆடை அணிதல் சிறந்த பராமரிப்பாக இருக்கும் (குல்லாய் & சுவாசக்கவசம்)    
  • தன்  சுத்தமாக பால் கறப்பது- பால் கறக்கும் போது- புகை பிடித்தல், வெற்றிலை, பீடா பயன்படுத்துதல் மற்றும் குட்கா (பான்) பயன்படுத்துதல் ஆகியவற்றை  முற்றிலும் தவிர்க்க வேண்டும்.                                                                                                  
  • பால் கறப்பவர் தனது கை நகத்தை ஒட்ட வெட்ட வேண்டும்.
  • பால் கறக்கும் முன்னரும், பின்னரும் கையை சோப்பு போட்டு கழுவவேண்டும்.
  • முழுக்கையை பயன்படுத்தி பால் கறக்க வேண்டும் (Full hand).      
  • கலப்படமற்ற நிலையில் பால் கொடுத்தல்.     
  • பாலானது 5-7  நிமிடத்திற்குள் மடியில் இருந்து கறந்துவிடவேண்டும்.
  • பால் கறப்பவர் பால் கறக்கும் போது கையை ஈரப்படுத்த பாலில் கையை நனைப்பதோ/ தூய்மையற்ற எண்ணெயில் நனை ப்பதோ/ முற்றிலும் தவிற்க வேண்டும்.                     
  • பால் கறக்கும் பொழுது முதலில் வரும் பாலை (எல்லாக் காம்பிளிருந்தும்) கீழே விடவும்.
  • கடைசியாக பால் கறக்கும் போது பொருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் கொண்டு பால் கறப்பதால் அதிக அளவிலான கொழுப்புச்சத்தை பெறலாம்.
  • ஏறுவரிசையில் மாடுகளை கறக்கவும், வயது குறைந்த மாட்டை முதலில் கறக்க வேண்டும் ஆக கடைசியான வயதான மாட்டை கறப்பது சிறந்த பராமரிப்பாகும்.                                                                           

உயிரியல் பாதுகாப்பு மேலாண்மை முறைகள்

  • தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போட  வேண்டும்.
  • மாதம் இருமுறை உண்ணி நீக்கம் செய்தல்.
  • பூஞ்ஜை காளான் பாதித்த தீவனத்தை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • மடிநோய் வராமல் பராமரிக்க வேண்டும், வந்தால் உடனே தாமதிக்காமல் முதலுதவி செய்ய வேண்டும்.
  • பண்ணைக்குள் வரும் எல்லாவகை வாகனத்தின் சக்கரத்தையும் கிருமி நாசினிக்கொண்டு தூய்மை செய்ய வேண்டும்.
  • பண்ணையின் நுலைவாயிலில் கிருமி நாசினி நிறப்பப்பட்ட கால்/ சக்கர நனைப்புத்தொட்டி வைக்க வாய்யிருப்பின் கட்டாயம் வைப்பது நல்லது.

ஆகவே பண்ணையாளர்கள் அனைவரும் மேற்கூறிய வழிமுறைகளை  தவறாமல் கடைபிடித்து தரமான மற்றும் தூய்மையான நிலையில் பால் கறந்து பண்ணை வளம் மற்றும் நாட்டு வளம் பேன வழிசெய்யவும்.

மருத்துவர் சு. முத்துக்குமார். MVSc, DSE.,

தொழில் நுட்ப வல்லுநர்- கால்நடை பராமரிப்பு

வேளாண்மை அறிவியல் நிலையம்- சிக்கல்

English Summary: Guideline for Dairy Farmers: How To Ensure Good Dairy Hygiene And Farm Management
Published on: 11 May 2020, 02:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now