உலர்புல்
- பசுமை நில இலைகள் நிறைந்திருக்க வேண்டும்.
- எளிதில் செரிக்க வேண்டும்.
- மண், அழுக்கு மற்றும் களைச் செடிகள் இன்றிச் சுத்தமாக இருக்கவேண்டும்
- பூஞ்சாணப் பாதிப்பு இருக்ககூடாது
உலர்புல் தயாரிக்கும் முறைகள்
நிலத்தில் பரப்பி உலர வைத்தல்
அறுவடை செய்த தீவனப்பயிர்களை நிலத்தில் பரப்பி அவ்வப்போது திருப்பிப்போட வேண்டும். பெரும்பாலும் இம்முறையில் உலர்புல் தயாரிக்கப்படுகிறது.
சிறு கத்தைகளாகக் கட்டி உலரவைத்தல்
சோளம், கம்பு, ராகி போன்ற தீவனப்பயிர்கள் அறுவடைக்குப்பின் சிறு கத்தைகளாகக் கட்டி கலர வைக்கலாம். எனினும் கத்தைகளை அவ்வப்போது திருப்ப வேண்டும்
முக்கோணக் கூம்பு வடிவ முறை
சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம் போன்ற தீவனப்பயிர்களைச் சிறு கத்தைகளாகக் கட்டியபின் கூம்பு வடிவத்தில் நிற்க வைத்து உலர வைக்கலாம். இம்முறையானது மழைக் காலத்தில் பயனள்ளதாக இருக்கும்.
உலர்புல் தயாரித்தல் மற்றும் சேமிக்கும்போது ஏற்படும் இழப்புகள்
- பயறு வகைத் தீவனப்பயிர்களை அதிக வெயிலில் உலர்த்தும்போது இலைகள் இழப்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மேலும் பசும்புல்லில் உள்ள கரோட்டின்கள் இழப்பு அதிகரிக்கலாம்.
- மழைக் காலம் பனி பெய்யும் காலங்களில் தீவனங்களைப் பாதுகாக்க வேண்டும். உலர வைக்கப்பட்ட தீவனங்கள் மழையில் நனைந்தால் சத்துகள் விரயம் அதிகரிக்கும். மேலும் பூஞ்சை காளான் வளர ஏதுவாகும்.
- தீவனப்பயிர்களை அப்படியே உலர வைப்பதைவிட சில சமயங்களில் சிறு துண்டுகளாக நறுக்கி உலர வைப்பது எளிது.
உலர்புல் தயாரிப்பதற்கான புதிய உத்திகள்
மழை மற்றும் பனிக் காலங்களில் போதிய வெயில் கிடைக்காத போது சூரிய சக்தி உலர் கலன்களைப் பயன்படுத்தலாம். தற்காலத்தில் சூரிய உலர்கலன்கள் 2 முதல் 4 இலட்சம் செலவில் அமைக்க முடியும்.
நன்மைகள்
- மழை மற்றும் பனியில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
- விரைவில் உலர வைப்பது எளிது
- சத்துகள் சேதாரம் குறைவு
- கால்நடைகள் விரும்பி உண்ணும்
- பயறு வகைத் தீவனங்களை இம்முறையில் உலரவைத்துச் சேமிப்பது எளிது.