Animal Husbandry

Monday, 15 March 2021 11:04 AM , by: Elavarse Sivakumar

Credit: Wiktionary

கால்நடைகளைப் பொருத்தவரை, நம் குழந்தைகள் போல கவனிக்க வேண்டும் என்பார்கள். நம்முடைய வாழ்வாதாரமாகத் திகழும் கால்நடைகளைக் காலம் முழுவதும் பராமரிப்பதுடன், நன்றிக்கடன் ஆற்றும் மனப்பாங்கு உள்ளவர்களாக இருப்பதும் முக்கியம்.

பராமரிக்க டிப்ஸ் (Tips to maintain)

அந்த வகையில் பிறந்தக் கன்றுக்குட்டியை எவ்வாறு பராமரிப்பது என்பதைப் பார்ப்போம்.

  • கன்று பிறந்த உடனே அதன் வாயிலும் மூக்கிலும் போர்த்தியுள்ள கண்ணாடி போன்ற ஆடையை (malous) சுத்தம் செய்ய வேண்டும்

  • தாய் மாடானது அதன் நாக்கினால் கன்றின் உடல் முழுவதும் சுத்தம் செய்யும்

  • அவ்வாறு செய்யாவிடில் அல்லது குளிர்காலத்தில் பாரமற்ற துணி (அ) சணல் பையைக் கொண்டு கன்றினை சுத்தம் செய்து கன்றிற்கு சீரான சுவாசம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.

  • அதன் வயிற்றிலும் நெஞ்சிலும் சிறிது கையினால் அழுத்திவிட்டால் கன்று எளிதாக சுவாசிக்க இயலும்.

  • தொப்புள் கொடியை வயிற்றிலிருந்து 2 லிருந்து 5 சென்டிமீட்டர் நீளம்விட்டு, அறுத்து விட்டு அயோடின் அல்லது டிஞ்சர் தடவி முடிந்துவிட வேண்டும்.

  • குட்டித் தானாக எழுந்து சென்று தாய்ப்பால் அருந்த முடியவில்லை என்றால்,அதனை அதைத் தூக்கிவிட்டு விட்டு உதவி செய்யலாம்.

  • முடிந்தவரை 30-லி விருந்து 45 நிமிடங்களுக்குள் எழுத்து சென்று தாய்ப்பால் குடிக்கச் செய்ய வேண்டும்.

  • ஆறு மணி நேரத்திற்குள் சீம்பால் குடிக்கச் செய்ய வேண்டியது கட்டாயம்.

  • பிறந்த கன்றின் எடையை (Weight) அளவிட வேண்டும்.

  • மாட்டின் காம்பினை நன்கு நீரினால் (Water) கழுவிச் (Clean)சுத்தம் செய்ய வேண்டும்.

  • கொட்டிலில் உள்ள திரவங்களை அகற்றி அதை சுத்தப்படுத்த (Clean) வேண்டும்.

  • கன்றிற்குத் தேவையான படுக்கை வசதி (Bed) அமைத்துத் தரவேண்டும்.

  • குளிர்காலமாக இருந்தால் அதை குளிரில் இருந்து பாதுகாக்க சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க...

சுட்டெரிக்கும் சூரியன்- கால்நடைகளைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் தேவை!

பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?

கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)