கால்நடைகளின் மலடுத்தன்மையை மூலிகை மருத்துவத்தின் மூலம் எளிதில் நீக்கலாம் என வேளாண் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய கால்நடை உதவி பேராசிரியை, முனைவர் க.தேவகி கூறியதாவது :
சினை பிடிக்கும் தன்மை
கறவை மாடுகளுக்கு, இயல்பாகவே கருத்தரிக்கும் தன்மை உண்டு. ஆனாலும், சீதோஷ்ண நிலை, குடற்புழுக்கள், குறைந்த உட்சுரப்பிகள் உள்ளிட்ட பலவித காரணங்களால், சினை பிடிக்கும் தன்மை குறையலாம்.
இதனால், கன்று போடும் இடைவெளி அதிகமாகி, மலட்டுத்தன்மை ஏற்படும். இதனால் மாடு வளர்ப்போருக்கு வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகும்.
கால்நடை மருத்துவர் (Veterinary Doctor)
அத்தகைய சூழ்நிலையில், கால்நடை மருத்துவரை அணுகி மாடுகளுக்கு மலட்டுத்தன்மையை நீக்க, சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில், மூலிகை மருத்துவ முறையில் மலட்டுத்தன்மை நீக்கலாம்.
1 முதல் 4 நாட்கள் (1 to 4 Days)
முதல் நான்கு நாட்களுக்கு தினமும் ஒரு வெள்ளை முள்ளங்கி, வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையுடன் சிறிது உப்பு சேர்த்து, மாடுகளுக்குத் தர வேண்டும்.
5-வது நாள் (5 Days)
ஐந்தாவது நாள் முதல், சோற்றுக்கற்றாழை, வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையுடன் சிறிது உப்பு சேர்த்து, நான்கு நாட்களுக்கு தினம் ஒரு வேளை வழங்கவேண்டும்.
4 நாட்கள் (4 days)
அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கையளவு முருங்கை இலையும், வெல்லம், உப்பு சேர்த்துத் தரலாம்.
4 நாட்கள் (4 days)
அடுத்த, நான்கு நாட்களுக்கு, நான்கு கையளவு பிரண்டை வெல்லம், உப்பு சேர்த்து தரலாம்.
கடைசியாக, நான்கு நாட்களுக்கு ஒரு கைப்பிடியளவு, கருவேப்பிலையுடன், வெல்லம், உப்பு சேர்த்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு தருவதால், மலட்டுத்தன்மை ஏற்பட்ட கறவை மாடுகளும், சினை பிடிக்கும், வருவாய் இழப்பு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
கோடை வெயில் தாக்கம் துவக்கம்- இளநீர் விற்பனை அதிகரிப்பு!
ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!
PM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்!