- சீம்பாலில் சாதாரண பாலை விட 7 மடங்கு புரதச்சத்து அதிகமாகவும், மொத்த திட சத்துகள் இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது. எனவே சீம்பால் கன்றின் தொடக்க கால வயதில் புரதச்சத்து மற்றும் இதர சத்துகளையும் அளிக்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் முக்கிய காரணிகளான தாது உப்புகளும், வைட்டமின் ‘ஏ’ சத்தும் சீம்பாலில் அதிக அளவு உள்ளது. இவற்றை சீம்பால் மூலமாக கன்று உட்கொள்ளும் போது கன்றின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது.
- சீம்பால் ஒரு மலமிளக்கியாகச் செயல்பட்டு கன்றுகளின் முதல் மலத்தினை வெளியேற்றுவதற்கு உதவி புரிகிறது.
- மாடுகளைப் பொதுவாகத் தாக்கும் தொற்று நோய்கள் மற்றும் நுண்ணுயிரி நோய்களுக்கு எதிராக மாடுகளுக்கு தடுப்பூசி அளிப்பதால் அவற்றுக்கு எதிராக மாடுகளின் உடலில் நோய் எதிர்ப்புப் புரதங்கள் உருவாக்கப்பட்டு அது சீம்பால் மூலம் கன்றுகளுக்கு கிடைப்பதற்கு வழி வகை செய்யலாம்.
- வயது முதிர்ந்த மாடுகள் நிறைய நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால் சீம்பாலில் அதிகமான காமா குளோபுலின்கள் இருக்கும்.
- காமா குளோபுலின்கள் எனும் நோய் எதிர்ப்புப் புரதங்கள் உடையாமல் கன்றுகளின் குடல் வழியாக அவற்றின் உடலில் உறிஞ்சப்படவேண்டும்.
- ஆனால் இந்த காமா குளோபுலின்கள் இதர புரதங்களாக உடைக்கப்பட்டு விட்டால் அவை மற்ற சாதாரணப் புரதங்களைப் போலத்தான் செயல்படும்.
- புதிதாகப் பிறந்த கன்றுகளின் குடல் இந்த காமா குளோபுலின்களை முழுவதும் உறிஞ்சுவதற்கு சிறிது நேரம் மட்டுமே அனுமதிக்கும். இவ்வாறு அவற்றின் குடல் காமா குளோபுலின்களை உறிஞ்சும் திறன் அவை பிறந்து 1-2 மணி நேரத்தில் மிகவும் அதிகமாக இருக்கும்.
- இதைக் கருத்தில் கொண்டு கன்று பிறந்த 15-30 நிமிடங்களில் முதல் தவணையான சீம்பாலையும், இரண்டாம் தவணை சீம்பாலை கன்று பிறந்த 10-12 மணி நேரத்திலும் அளிக்கவேண்டும்.
- கன்றுகள் பிறக்கும் போது அவற்றின் சிறு குடலிலுள்ள சத்துகளை உறிஞ்சும் செல்கள் முதிர்ச்சி அடையாமல் இருக்கும். எனவே இந்நிலையில் அவை பெரிய அளவுள்ள காமா குளோபுலின்களை எளிதில் உறிஞ்சிக்கொள்ளும்.
- கன்றின் வயது மணிக்கணக்கில் அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் சிறு குடலிலுள்ள உறிஞ்சும் செல்கள் முதிர்ச்சியடையாத நிலையிலிருந்து முதிர்ச்சி அடையத் தொடங்கும். இதன் பிறகு பெரிய அளவிலான புரத மூலக்கூறுகளை அது உறிஞ்சாது.
- இவ்வாறு கன்றுகளின் சிறு குடலிலுள்ள செல்கள் முதிர்ச்சி அடைய அடைய அவற்றின் உறிஞ்சும் திறன் குறைந்துகொண்டே வந்து முழுவதுமாக நின்று விடும்.
- இதற்கு குடல் மூடுதல் என்று பெயர். இவ்வாறு குடல் மூடும் சமயத்தில் கன்றுகளின் இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்புப் புரதங்களின் அளவும் கன்றின் நோய் எதிர்ப்புத் திறனும் நேர்மாறாக இருக்கும்.
- குடல் மூடும் போது கன்றுகளின் குடலில் சிறிதளவு காமா குளோபுலின்களை மட்டுமே உறிஞ்சப்பட்டிருந்தால் அவற்றின் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருக்கும்.
- இதனால் கன்றுகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பதுடன் அவற்றின் நோயினால் பாதிக்கப்படும் விகிதமும் அதிகரிக்கும்.
- கன்றுகளின் உடல் எடைக்கேற்ப சீம்பாலை அவற்றின் உடல் எடையில் 1 பங்கு அளித்தல்.
- கன்று பிறந்த முதல் 15-30 நிமிடங்கள் – கன்றின் உடல் எடையில் 5-8%
- முதல் 10-12 மணி நேரங்கள் - கன்றின் உடல் எடையில் 5-8%
- இரண்டாம் நாள் - கன்றின் உடல் எடையில் 10 %
- மூன்றாம் நாள் - கன்றின் உடல் எடையில் 10 %
- கன்று ஈன்ற மாடுகளில் சுரக்கும் அதிகப்படியான சீம்பாலை கறந்து விட வேண்டும். இல்லையேல் அதிகப்படியான சீம்பாலை கன்றுகள் குடித்துவிட்டால் கன்றுகளில் கழிச்சல் ஏற்படும்.
- மாடுகளிலிருந்து சுரக்கும் அதிகப்படியான சீம்பாலை குளிர்பதனப் பெட்டியில் சேமித்து தாயற்ற மற்ற கன்றுகளுக்குக் கொடுக்கலாம்.
- சீம்பாலை உறைய வைத்து நீண்ட நாட்களுக்கும் சேமிக்கலாம். இயற்கையாக சீம்பாலை நொதிக்க வைத்தும் 5-7 நாட்களுக்கு சேமித்தும் பயன்படுத்தலாம்.
English Summary: Importance of Colostrum milk for Young Calf
Published on: 20 November 2018, 04:26 IST