மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் வணிக நோக்கில் செயல்படுவதால் கலப்பின பசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உழவு மாடுகள்
நவீன இயந்திரங்களின் வருகையால் உழவு மாடுகள் மற்றும் வண்டி மாடுகளின் பயன்பாடு குறைந்து விட்டது. இதனால் ஆரோக்கிய நிலையில் உள்ள காளை மாடுகள் அடிமாடாக அனுப்பப்பட்டு, இந்த இனம் அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ளது.
நாட்டு மாடுகள்
நாட்டு மாடுகள் எந்த தட்பவெப்ப நிலையையும் தாங்கக்கூடியவை. எளிதில் நோய் தாக்குவது இல்லை. கலப்பின பசுக்களுக்கு பராமரிப்பு செலவு அதிகம். தீவனத்திற்கேற்ப பால் தரும். ஆனால் நாட்டு மாடுகள் கிடைப்பதை உண்டு வாழும். 5 லிட்டர் வரை பால் கறக்கும். பேரையூர் தாலுகாவில் சாப்டூர், அணைக்கரைபட்டி, பழையூர், மேலப்பட்டி, சந்தையூர், கீழபட்டி உள்ளிட்ட பல ஊர்களில் நுாற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் வளர்க்கப்பட்டன.
தன்போக்கில் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும். இம்மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
நாகராஜ்: குறைந்த வருவாய் தரும் இவற்றை தீவனம் கொடுத்து பராமரிக்க வழி இல்லை. இதனால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் சில ஆண்டுகளில் நாட்டு மாடுகள் இனம் முற்றிலும் அழிந்து விடும் என்றார்.
மேலும் படிக்க
தீவனப் பற்றாக்குறையைத் தீர்க்க கால்நடைகளுக்கான ஊறுகாய்ப் புல் தயாரிப்பது எப்படி?