Animal Husbandry

Tuesday, 09 March 2021 09:15 AM , by: Elavarse Sivakumar

Credit : Dinamalar

கறவை மாடுகளுக்குத் தீவனம் மிக மிக இன்றியமையாதது. நிறை பசுந்தீவனமும், அவை சாப்பிடும் அளவுக்கு உலர் தீவனம் அல்லது வைக்கோல் அளிக்கலாம்.

கலப்புத் தீவனம் (Mixed fodder)

கறவை மாட்டின் தீவனம் குறைந்தால் உடனே பால் அளவு குறையும். எனவே 2.5 லிட்டருக்கு மேல் கறக்கும் மாடுகளுக்கு ஒவ்வொரு 2 லிட்டருக்கும் 1கிலோ கலப்புத் தீவனம் அளிக்க வேண்டியது கட்டாயம்.

மென்மையாகக் கையாளுதல் (Gentle handling)

கறவை மாடுகளை மென்மையாகக் கையாளுதல் மிக மிக அவசியம். அவை பயப்படும் பட்சத்தில், பால் உற்பத்தி குறைய அதிக வாய்ப்பு உள்ளது.

கன்று ஈன்ற 16-வது நாளிலேயே அதன் சூடு வெளிப்படும். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கேற்றவாறு பராமரிக்க வேண்டும். கரு அழிந்தால் இவ்வாறு நேரிட வாய்ப்பு உள்ளது. சரியான நேரம் பார்த்து அடுத்த கருத்தரிப்புக்குத் தயார் செய்தல் வேண்டும்.

  • பால் உற்பத்தி அளவை, ஒவ்வொரு முறையும் பதிவேடுகளில் பதிவு செய்தால், அதன் உற்பத்தித் திறனை அறிந்துகொள்ள உதவும்.

  • ஒவ்வொரு கறவை மாவட்டிற்கும், தனித்தனிப் பதிவேடுகள் பராமரிப்பது அவசியம்.

  • கலப்புத் தீவனத்தைப் பால் கறக்கும் முன்பு அளிப்பது சிறந்தது.

  • அடர் தீவனத்தை பால் கறந்த பின்பு அளிப்பது நல்லது.

  • ஒரே சீரான இடைவெளியுடன் தண்ணீர் வழங்க வேண்டும்.

  • வைக்கோல் போன்ற உலர் தீவனங்கள் பால் உற்பத்தியை அதிகரிக்கும்.

  • கறக்காமல் மடியிலேயே விடப்படும், அதிகப் பால் சுரப்பதைக் குறைத்துவிடும் அபாயம் உள்ளது.

  • எனவே முடிந்தவரை, முழு கையையும் பயன்படுத்திப் பால் கறக்க வேண்டும். இரண்டு விரல் (பெரு விரல் அல்லது ஆட்காட்டி விரல்) கொண்டு கறப்பது, சீராக இல்லாமல் காம்புகளில் அதிக அழுத்தம் கொடுக்கும். இதன் காரணமாக காம்பில் வலி உண்டாகிறது.

  • கன்று ஊட்டாமலேயே பசு, பால் கறக்குமாறு பழக்க வேண்டும். அப்போதுதான் கன்றைப் பசுவிடம் இருந்து விரைவில் பிரிக்க உதவும்.

  • திறந்த வெளிக்கொட்டில் அமைப்பே கறவை மாடுகளை சுதந்திரமாக உணர வைக்கும்.

  • எருமை மாடுகளைப் பால் கறக்கும் முன்பு நன்கு கழுவினால், சுத்தமானப் பால் கிடைக்கும். தினசரி எருமை மற்றும் மாடுகளைக் குளிப்பாட்டுதல், உதிர்ந்த முடிகயை நீக்க உதவும்.

    ஏதேனும் வித்தியாசம் இருந்தால், அதை அறிந்து நீக்குதல் வேண்டும்.

  • உதாரணமாக அடிக்கடி உதைத்தல், நக்குதல் போன்றவை இருப்பின் அதன் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

  • ஒவ்வொரு கறவைப் பருவத்திற்கும் இடையே 60 முதல் 90 நாட்கள் இடைவெளி விட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பால் தரும் நாட்கள் குறையும். சரியான நேரத்தில் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

பதிவு அவசியம் (Registration is required)

ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் அடையாள எண் இட்டு, அதன் பால் அளவு. கொழுப்புச்சத்து அளவு உணவு உட்கொண்ட அளவு, கன்று ஈனும் பருவங்கள் ஆகியவைப் பதிவு செய்யப்பட வேண்டும்.

தகவல்

சக்தி பால்டைரி ஃபார்ம்

மேலும் படிக்க...

சுட்டெரிக்கும் சூரியன்- கால்நடைகளைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் தேவை!

பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?

கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)