கோடை வெயிலின் தாக்கத்தால், பால் உற்பத்திக் குறைவதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
துணைத்தொழில் (Subsidiary)
கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளின் முக்கிய துணைத் தொழிலாகக் கறவை மாடு வளர்ப்பு உள்ளது.
பால் உற்பத்தி மூலம் இவர்களது தினசரி வருவாய் உறுதி செய்யப்படுகிறது. அதேநேரத்தில் பால் உற்பத்தியில், பருவநிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
மேய்ச்சல் பாதிக்கும் (Affect grazing)
அடை மழைக்காலம் மற்றும் கடும் கோடைக்காலத்தில் பால் உற்பத்தி பாதிக்கப்படும். ஏனெனில் இந்தப் பருவ காலங்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது பாதிக்கும். மாடுகள் தீவனம் எடுத்துக் கொள்வதும் குறையும், நோய் பாதிப்புகளும் அதிரிக்க வாய்ப்பு உள்ளது.
20% பாதிப்பு (20% damage)
இந்நிலையில், பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், தற்போது பகலில், 35 டிகிரி செல்ஷியசைத் தாண்டுகிறது. இதனால் மாடுகள் வெப்ப அயர்ச்சியால் பாதிக்கப்படுகின்றன.மேலும் வெயிலால் பசுந்தீவன உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 10 முதல் 20 சதவீதம் வரை பால் உற்பத்தி சரிந்துள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கால்நடை பராமரிப்பு (Animal care)
-
இதற்குத் தீர்வாக மாட்டுக்கொட்கையைக் காற்றோட்டமானவும், குளிர்ச்சியாகவும் பராமரிக்க வேண்டும்.
-
மாடுகளைக் குளிர்ந்த நீரில் குளிப்பாட்ட வேண்டும்.
-
எப்போதும், கால்நடைகளுக்குத் தேவையான அளவுக்குச் சுத்தமானக் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க....
பால் பண்ணை அமைக்க ரூ.1.75 லட்சம் மானியம்- மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!!