பொதுவாக பொறுப்பாக வேலை செய்யாதவர்களை, நீங்கள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று திட்டுவது வழக்கம். ஆனால், அவ்வாறு மாடு மேய்ப்பதுடன் நின்றுவிடாமல், மாட்டுச்சாணத்தைச் சேகரிப்பவராக இருந்தால், நீங்களும் எளிதாக ஏற்றுமதியாளராக மாற முடியும்.
என்னடா இது,கேட்கவே வியப்பாக இருக்கிறது அல்லவா? என்று எண்ணுகிறீர்களா? நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், உண்மை அதுதான். உலக நாடுகளுக்கு நமது இந்திய நாட்டு மாடுகளின் சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக மலேசியா, மாலத்தீவு, அமெரிக்க நாடுகளுக்கு இயற்கை வேளாண்மைக்கு உரமாக எற்றுமதி செய்யப்படுகிறது.
ஒப்பந்தம்
2007ம் ஆண்டுவரை சாணத்தின் மகத்துவத்தை உலகம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. தற்போது மாட்டு சாணம் சிறுநீரின் செயல்பட்டால் உண்டான இயற்கை வேளாண்மையின் மகத்துவத்தை உலகம் புரிந்து கொண்டு தற்போது கூட குவைத் நாடு 192 .மெட்ரிக் டன் சாணத்தை சன்ரைஸ் அக்ரி லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.
மாடுகளின் சாணம் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, மண் புழ உரம் தயாரிக்க பயன்படுகிறது. இது உரமாக இட்ட தோட்டங்களில் இருந்து விளையும் காய்கள்,பழங்கள்,கீரைகள் ருசியாகவும் மணமுள்ளதாக இருக்கிறது. இதனால் மாட்டு சாணத்திற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளளது.
இதைத்தான், ஒருநாட்டு பசு மாடு இருந்தால் போதும் 30எக்கர் விவசாயம் செய்யலாம் என்று கூறுகிறார் இயற்கை விவசாய விஞ்ஞானி பாலேக்கர்.
36 வகை பொருட்கள்
இது மட்டுமல்லாமல், நாம் நாட்டில் மாட்டு சாணத்திலிருந்து பல்வேறுவகையான மருத்துவ பொருட்கள்,அழகு சாதன பொருட்கள்,பல்பொடி வார்னிஸ், பயிர் ஊக்கிகள், பூச்சி நோய் விரட்டிகள் என 36 வகையான பொருட்கள் சத்தம் இல்லாமல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மாட்டு சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் ஆர்க், அமெரிக்க காப்புரிமை பெற்ற மருத்துவ பொருளாகும்.
ரூ.155கோடி
பண்டைய காலங்களில் மண் வீடுகளில் சுத்தப்படுத்த கிருமி நாசனி யாக பயன்படுத்த பட்ட சாணம் தற்போது ஏற்றுமதி பொருளாக ,அன்னிய செலாவணி அள்ளிதரும் மதிப்பு மிக்க பொருளாக சாணம் இருப்பது வரவேற்க தகுந்ததே. கடந்த 2021ஆம் ஆண்டில் ரூ.155கோடி மதிப்புள்ள மாட்டு சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
தோட்டப் பணிகளில் ஈடுபட்டால், மன அழுத்தம் குறையும்- ஆய்வில் தகவல்!