பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 23 June, 2021 10:06 AM IST

கால்நடை இறப்பதால் ஏற்படும் நஷ்டங்களை தவிர்க்க காப்பீடு செய்யுங்கள் என்று கால்நடை வளா்ப்போருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

கால்நடை காப்பீட்டு திட்டம்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கால்நடை வளா்ப்போருக்கு கால்நடை இறப்பதால் ஏற்படும் நஷ்டங்களில் இருந்து பாதுகாக்கவும், கால்நடை காப்பீட்டின் நன்மைகளை விளக்கும் வகையில் தமிழக அரசின் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-21ஆம் ஆண்டுக்கான தேசிய கால்நடை குழுமம் திட்டத்தின்கீழ் கால்நடை காப்பீட்டு திட்டம் செயல்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 1500 கால்நடைகளுக்கு காப்பீடு செய்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆடு, மாடுகளுக்கு காப்பீடு

கால்நடை வளா்ப்போா் தங்களிடம் உள்ள கால்நடைகளை ஒரு வருடம் அல்லது முன்று ஆண்டுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு பசு, ஒரு எருமை, பத்து எண்ணிக்கை கொண்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வைத்து இருப்போா் இத்திட்டத்தில் சோ்ந்து பயன் பெறலாம். ஒரு நபா் ஐந்து கால்நடை இனங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்து கொள்ளலாம். கறவைப்பசு, எருமை இவ்வினங்கள் 2 வயது முதல் 8 வயதிற்குள் இருக்க வேண்டும். வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் 1 முதல் 3 வயதுக்குள் இருக்க வேண்டும்.

50% மானியம்

இத்திட்டத்தில் கால்நடைகளுக்குரிய காப்பீடு பிரிமியத்தில் 50 சதவீதம் மானியத்தில் காப்பீடு செய்து பயனடையலாம். கால்நடைகள் வளா்ப்போா் கால்நடைகளுக்கு கால்நடை மருந்தகத்தின் உதவி கால்நடைமருத்துவா் ஆய்வு செய்து சான்று வழங்கிய பின்னா், கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்படும். காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொருத்தப்படும். காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறக்க நேரிட்டால் காதுவில்லை, கால்நடை உதவி மருத்துவரால் நேரில் ஆய்வு செய்து வழங்கும்

அணுகவேண்டிய முகவரி

கால்நடைகளின் இறப்புச் சான்றினையும், காதுவில்லையும் புகைப்படமும் இணைத்து காப்பீடு நிறுவனத்தில் அளித்தால் தங்கள் கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் இத் திட்டத்தில் சேர விரும்பும் கால்நடை வளா்ப்போா் அருகாமையில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம்

மேலும் படிக்க....

கோழிப்பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை!

மாட்டு சாணம் வைத்து கோழிகளுக்கு தீவனம் தயாரிக்கலாம்

மானியத்துடன் கூடிய கால்நடைக் காப்பீடு திட்டம்!

English Summary: Insure to avoid loss due to death of livestock !!
Published on: 23 June 2021, 09:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now