மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 October, 2018 3:01 PM IST

இந்தியாவின் சில பகுதிகளிலும் வாத்துடன் மீன் வளர்க்கும் முறை முக்கியமான ஒன்றாகும்.

மீன் வளர்க்கும் குளமானது குறிப்பிட்ட நீர்த் தாவரங்கள் மற்றும் விலங்குகள் கொண்ட பாதுகாப்பான இடம். ஆதலால் வாத்துகளுக்கு எந்த வித நோயத்தொற்று பயமும் இருப்பதில்லை. அதற்குக் கைமாறாக வாத்துகள் மீன்களுக்கு ஊறுவிளைவிக்கும் தவளையின் குஞ்சுகள், தலைப்பிரட்டை, தட்டான் போன்றவற்றை உண்டுவிடுகிறது. மேலும் வாத்து கழிவுகள் நேராக குளத்தினுள் விழச்செய்யப்படுகின்றன. இது மீன்களுக்கு உணவாகிறது. மேலும் இதில் இரு நன்மைகள் அடங்கி உள்ளன.

மீனுடன் வாத்து வளர்ப்பு பண்ணையின் பயன்கள்

  • நாள்தோறும்ஒரு வாத்தின் கழிவு (20–30கிராம்/வாத்து) மூலம் மீனிற்கு உணவாக அல்லது உரமாக இருப்பதால் அதிக அளவு மீன் 

உற்பத்தி செய்ய முடியும்.

  • வாத்துகழிவு குளத்தில் குவியலாக இல்லாமல் ஒரே சீரான அளவில் உரமாக இடப்படுகிறது.
  • வாத்துகள்குளத்தினடியில் இருக்கும் நுண்ணுயிரிகளை தேடி தோண்டி எடுப்பதினால்மண் ஊட்டச்சத்து கூறுகள் நீரில் பரவும் மற்றும் மிதவை உயிரிகள் நீரில்உற்பத்தி அதிகரிக்கச் செய்யும்.
  • எடைஅதிகரிப்பிற்கான வாத்தின் உணவு ஓடைகளில் சிந்துவதை மீன் 

உணவாக எடுத்துக் கொள்ள முடியும்.

  • வாத்துகள்குளத்தில் நீந்துதல்துரத்துதல் போன்றவைகளால் குளத்தில் காற்றோட்ட வசதி ஏற்படுத்துகிறது.
  • வாத்துகள்வளர்க்கப்படும் மீன் குளங்களில் 5% சுத்தமான சூழல் 

அதிகரிக்கும் என அறியப்படுகிறது.

  • வாத்தின்எச்சம் மற்றும் வாத்தின் மீதமான தீவனம் இவற்றின் மூலம் 5 கி.கி/ஹெக்டர் என்ற அளவில் மீன் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
  • கூடுதல்நிலம் வாத்து வளர்ப்பு நடவடிக்கைளுக்கு தேவையில்லை
  • ஒரே நேரத்தில் தண்ணீர் பகுதியில் மீன்வாத்து முட்டை மற்றும் 
  • இறைச்சி மூலம் அதிக உற்பத்தி செய்ய முடிகிறது.
  • இதில் குறைந்த முதலீடு மூலம் அதிக லாபம் என்பது உறுதி.
  • உரமளிக்கும் செலவு குறைவு
  • ஆட்கூலி மிச்சப்படுத்தப்படுகிறது

இம்முறை இந்தியாவின் மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், பீஹார், ஒரிசா, திரிபுரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. இதற்கென ‘இந்திய ஓடும் வாத்து’ இனங்கள் வளர்க்கப்படுகிறது. வாத்துகளின் கழிவில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ளதால் வாத்துகள் ‘நடமாடும் உர இயந்திரங்கள்’ எனப்படுகிறது.

இம்முறையில் மீன் மற்றும் வாத்துகளுக்குத் தேவையான விலங்குப் புரதம் தேவையான அளவு கிடைக்கிறது. வாத்துகளின் கழிவில் 25 விழுக்காடு அங்ககப்பொருட்களும் 20 விழுக்காடு அனங்ககப் பொருட்களும் கார்பன், பாஸ்பரஸ், பொட்டாசியம், நைட்ரஜன், கால்சியம் போன்ற சத்துக்களும் மிகுந்துள்ளன.

வாத்துக்களுக்கு நீரின் மேலே கொட்டகை அமைத்தோ அல்லது அவற்றை நீரிலேயே சுதந்திரமாக திரிய விட்டோ வளர்க்கலாம். மிதக்கும் கொட்டில் மூங்கில் ஆல் ஆனதாகவோ சிறு இடைவெளியுடன் வாத்து கழிவுகள் நீரினுள் விழுமாறு அமைக்கப்பட வேண்டும். 1 மீ2 இடத்தினுள் 15 - 20 வாத்துகள் இருக்குமாறு செய்யலாம். கொட்டிலில் அடைப்பதை விட திறந்த வெளி முறையே சிறந்தது. வாத்துக்களின் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்து 2 மாதங்களுக்கு ஒரு முறை வளர்ந்த வாத்துகளை விற்றுவிட்டுப் புதிய குஞ்சுகளை குளத்தில் விட வேண்டும். 100 - 3000 / ஹெக்டர் என்ற எண்ணிக்கையில் வாத்துக்களைப் பராமரிக்கலாம்.

  • வாத்துகளுடன் வளர்ப்பதற்கு 10 செ.மீ அளவிற்கு மேற்பட்ட மீன் குஞ்சுகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் வாத்துகள் மீன் குஞ்சுகளை விழுங்கிவிடக்கூடும் மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையும் வாத்து எண்ணிக்கைக்கும் குளத்தின் அளவிற்கும் ஏற்றவாறு அமையும். நைட்ரஜன் மிகுந்துள்ள வாத்துக் கழிவுகள் நீர் வாழ் தாவர மற்றும் விலங்கு வளர்ச்சியை அதிகரிக்கும். இவற்றை விரும்பி உண்ணும் வெள்ளி கெண்டை, கட்லா, சாதாரண கெண்டை போன்ற மீன் வகைகள் இம்முறைக்கு ஏற்றவை. ஒரு ஹெக்டரில் 20000 விரலளவு மீன் குஞ்சுகளை விட்டால் ஓராண்டு இறுதியில் 3000 - 4000 கி. கி மீன்களை அறுவடை செய்யலாம். இது தவிர வாத்து முட்டைகள் மற்றும் இறைச்சியும் ஒரு கணிசமான இலாபத்தைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.

வாத்து வளர்ப்பு முறைகள் 
அதிக அளவிலான வாத்துக்களை திறந்த வெளி தண்ணீரில் வளர்த்தல்

  • இந்தமுறை வாத்து வளர்ப்பு மேய்ச்சல் வகையைச் சார்ந்தது.
  • இந்தமேய்ச்சல் முறையில் சராசரியாக 1000 வாத்துக்களை குழுக்களாக வளர்க்கலாம்.
  • பகல்நேரத்தில் ஏரிகள் மற்றும் நீாத்தேக்கங்கள் போன்ற பெரிய 

தண்ணீர் பரப்பில் மேய்க்கலாம்ஆனால் இரவில் பட்டியில் 

அடைக்க வேண்டும்.

  • இந்தபெரிய நீர் நிலைகளில் மீன் உற்பத்தி மிகவும் சாத்தியமாகும்.

மீன் குளம் அருகில் வேலியிட்ட கொட்டகையில் வாத்து வளர்ப்பு

  • ஒருமையப்படுத்தப்பட்ட வாத்து வளர்ப்பு கொட்டகை சிமெண்ட் 

தளம் மற்றும் உலர்ந்த ஈரப்பதம் தேங்காதவாறு மீன் குளம் அருகில் அமைக்க வேண்டும்.

  • சராசரியாக4 - 6   வாத்துகள் / சதுர மீட்டருக்கு என்ற  அளவில் மேற்குறிப்பிட்ட கொட்டகையில் வளர்க்கலாம்.
  • உலர்ந்தமற்றும் ஈரமான ஓட்டம் கொட்டகையை நாள் ஒன்றுக்கு 

ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்வாத்து கொட்டகையை சுத்தம் செய்த நீரை குளத்தில்கலக்குமாறு செய்ய வேண்டும்.

மீன் குளத்தில் வாத்து வளர்ப்பு

  • இது ஒரு பொதுவான வாத்து வளர்ப்பு முறையாகும்.
  • குளத்தின் வரப்பில் ஈரப்பதம் கொண்ட பாதியளவு வலையால் 

மூடப்பட்ட கொட்டகை அமைக்க வேண்டும்.

வளர்ப்பிற்காக வாத்து தேர்ந்தெடுத்தல்

  • வாத்து இனங்களை தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டும்அனைத்து

வகையான வீட்டு வளர்ப்பு வாத்துகளிலும் உற்பத்தி இருப்பதில்லை.

  • இந்தியாவின்முக்கிய வாத்து வளர்ப்பு இனங்கள் சைல்ஹெட் மீட் மற்றும் நாகேஸ்வரி.
  • ஹார்டிஎன்ற இரகம் இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட வளர்ப்பு

இனமாக கண்டறியப்படுகிறது.ஒரு ஹெக்டர் மீன் குளத்திற்கான  உரத்திற்கு தேவையான அளவு எண்ணிக்கையில் வாத்துகளை

 வளர்க்க வேண்டும்.

  • ஒரு ஹெக்டர் மீன் வளர்ப்பு குளத்தின் உரத்தேவைக்கு 200 -300 வாத்துகளை வளர்த்தால் போதுமானதாக கண்டறியப்படுகிறது.
  • 2-4 மாதங்களான வாத்துக்குஞ்சுகளுக்கு நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பான தடுப்பு மருந்துகளை கொடுத்த பிறகே அவற்றை மீன் குளத்தில் விடவேண்டும்.

தீவனம்

  • வாத்துகள் குளத்திலிருந்து இயற்கை உணவுகளை தேடிபிடித்து உண்ணும். ஆனால் அவை     மட்டுமே அவற்றின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது.
  • எதாவதொரு சமச்சீரான  கோழிதீவனம் மற்றும் அரிசி தவிடு கலந்த கலவை 1:2 என்ற விகிதத்தில் 100கிராம்/பறவை/நாள் என்ற அளவில் தர வேண்டும்.
  • இத்தீவனத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை அளிக்க வேண்டும். ஒரு முறை காலையும், இரண்டாவது முறை மாலையிலும் அளிக்க வேண்டும்.
  • தீவனத்தை குளத்தின் அருகில் அல்லது கொட்டகையில் இட வேண்டும்.
  • தீவனத்துடன் போதுமான அளவு தண்ணீரை ஒரு கொள்கலன்களில் வாத்தின் அலகு மூழ்கும்படி ஆழ்ந்த  கொள்கலனில் வழங்கப்பட வேண்டும்.
  • வாத்துகள் தண்ணீர் இல்லாமல் சாப்பிடாது. வாத்துகள் பூஞ்சாணத் தாக்குதல் மற்றும் கலப்பட உணவால் பாதிக்கப்படுகின்றன. அதனால் பூசணம்பிடித்த உணவுகளை நீண்ட நேரம் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
  • கடலை பிண்ணாக்கு மற்றும் சோளத்தில் ஆஸ்பரிஜில்லஸ் ப்ளேவஸ் கரும்பூஞ்சாண தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே இதனை தீவனத்திலிருந்து நீக்க வேண்டும்.

முட்டை

  • வாத்துகள் 24 வாரங்கள் வளர்ந்த பிறகு முட்டைகள் வைக்கத் தொடங்கும். அதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து முட்டைகள் இடுகின்றன.
  • வாத்துகள் இரவில் மட்டுமே முட்டைகளை இடுகின்றன. வாத்து கொட்டகை மூலைகளில் வைக்கோல் வைத்து முட்டைகள் இடுவதற்கு பராமரிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு நாள் காலையிலும் வாத்துகள் கொட்டகையிலிருந்து வெளிவந்த பிறகு முட்டைகளை சேகரிக்க வேண்டும்.

உடல் நலம்

  • கோழியுடன் ஒப்பிடும் போது வாத்துகள் சில நோய்களுக்கு உள்ளாகின்றன.
  • உள்ளூர் ரக வாத்துகள் மற்ற ரக வாத்துகளை விட நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தவையாக உள்ளன.
  • முறையான சுகாதாரம் மற்றும் சுகாதார பாதுகாப்பு கோழி போன்று வாத்திற்கும் அவசியமாகிறது.
  • வாத்தை தாக்கும் தொற்று நோய்களான வாத்து வைரஸ், ஹெபடைடிஸ், வாத்து காலரா, அடித்தளகட்டை நோய் மேலும் பல உள்ளன.
  • வாத்துகள் வாத்து பிளேக் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க நோய் தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். நோய்வாய்ப்பட்ட பறவைகளை கண்டறிந்து அவற்றை  தனிமைப்படுத்த வேண்டும்.
  • குளத்திற்கு செல்ல அனுமதிக்க கூடாது. மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

அறுவடை

  • உள்ளூர் சந்தையில் மீன் தேவையை கருத்தில் கொண்டு பாதியளவு மீனை அறுவடை செய்ய வேண்டும்.
  • பகுதி அறுவடைக்கு பிறகு, குளத்தில் அதே இனங்கள் மற்றும் அதே எண்ணிக்கை அளவு மீன்குஞ்சுகளை விட வேண்டும்.
  • இறுதியில் 12 மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்ய வேண்டும்.
  •  மீன் உற்பத்தி வீதம் 3500-4000 கிலோ/ஹெக்டர்/ஆண்டு மற்றும் 2000 -3000 கிலோ/ஹெக்டர்/ஆண்டு என்ற அளவில் இருக்கும்.
  • இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, வாத்துகளை வாத்து சந்தையில் இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். ஏறத்தாழ 18,000 – 18,500 முட்டைகள் மற்றும் 500 – 600 கிலோ வாத்து இறைச்சி பெறலாம்.
English Summary: Integrated Farming System- Duck with Fish
Published on: 17 October 2018, 03:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now