மாடு உள்ளிட்ட கால்நடைகளை மர்ம நோய் தாக்குவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். அதே சமயம் மாடுகள் இறப்பை கால்நடை மருத்துவர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற புகார் எழும்பியுள்ளது.
மாடு உள்ளிட்ட கால்நடைகளை மர்ம நோய் தாக்கி வருகிறது, இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே சமயம் மாடுகள் இறப்பை கால்நடை மருத்துவர்கள் கண்டுகொள்ளவில்லையோ என கேள்வி எழுந்துள்ளது.
08ஆம் தேதி இரவு கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள செந்தில் என்பவருடைய ஜெர்சி மாடு மர்ம நோய் தாக்கத்தால் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தது. இரவே இறந்த நிலையில் அருகிலேயே கால்நடை மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தும் மதியம் வரை மருத்துவர்கள் வந்து சேரவில்லை.
மேலும் உடற்கூறாய்வு செய்து நோய்க்கான காரணம் குறித்து மாதிரிகளை பரிசோதிக்காமல், காலம் தாழ்த்தி வருவதாகவும் விவசாயிகள் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து நோய்க்கான காரணம் குறித்து முறையாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் கால்நடை மாவட்ட அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் விவசாயிகள்.
அதற்கு அலுவலகத்தில் உள்ள JD பொன்னுவேல் என்பவர் மாடு புதைக்கப்பட்டதாக தகவல் தெரிவிப்பதாகவும் கால்நடை துறை அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நோயானது கோமாரி நோய்க்கான அறிகுறிகள் போல் இருப்பதனால், மாடுகளுக்கு வாயில் நுரை தள்ளியும், காலில் புண்கள் ஏற்பட்டு இறந்துபோகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
வாய்ப்புண்ணால் மாடு சாப்பிடவே சிரமப்பட்டு பட்டினி கிடந்து, மிகவும் பாதிப்புக்குள்ளாகி வரும் இந்நிலையில் அதிகாரிகள் இறந்த மாட்டிற்கான மாதிரிகளை கூட கண்டறிந்து நோயினை உறுதிப்படுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் படிக்க:
கோமாரி நோய்த் தாக்குதலால் அடுத்தடுத்து 200 மாடுகள் உயிரிழந்த பரிதாபம்!
கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி தட்டுப்பாடு: இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!