Animal Husbandry

Thursday, 01 October 2020 04:10 PM , by: Elavarse Sivakumar

Credit : Food safety news

கோழிகளுக்கு வழங்கும் தீவனங்களில் பூஞ்சான் நச்சின் தாக்கம் உள்ளதால் பரிசோதிப்பது அவசியம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  • இனி வரும் நாள்களில் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். காற்று மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் தென்மேற்கில் இருந்து வீசக்கூடும்.

  • வெப்பநிலையை பொருத்தவரை அதிகபட்சமாக 93.2 டிகிரியும், குறைந்தபட்சம் 75.2 டிகிரியாகவும் காணப்படும்.

  • தென்மேற்கு பருவமழையின் காலக்கட்டம் முடிவுறும் தருவாயில் இருந்தாலும், மேலும் ஒரு வாரத்துக்கு அதன் தாக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அனைத்து மாநிலங்களிலும் இயல்புக்கு அதிகமான மழை காணப்பட்டதால், கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் தீவன மூலப்பொருள்களில் குறிப்பாக சோயா புண்ணாக்கு மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றில் அதிகளவில் ஈரப்பதம் காணப்படுகிறது.

  • எனவே இதனைக் கவனத்தில் கொண்டு, தீவனம் தயாரிப்போர் மற்றும் கோழிப் பண்ணையாளர்கள் மூலப்பொருள்களை பூஞ்சான் நச்சு பரிசோதனை செய்து பின்னர் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பண்ணைக் குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

நோய்களைத் துவம்சம் செய்யும் நுண்ணுயிரிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)