இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 25 October, 2018 5:46 PM IST

கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை தயாரித்து அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பசுந்தீவனம்

மழைக்காலங்களில், பசுந்தீவனம் மிகுதியாக கிடைத்தாலும், செரிமானம் மற்றும் உற்பத்தி திறன் குறைவாக காணப்படும். மழையில் நனைந்த பசுந்தீவனத்தை உண்பதற்கு கால்நடைகள் தயங்கும். இதனால் கால்நடைகளுக்கு, மழைக்காலத்தில் உணவு தயாரிப்பு பற்றியும், அதனை அளிக்கும் முறை, சேமிப்பு திறன் போன்றவற்றில் கையாள வேண்டிய உத்திகளை பற்றியும், கால்நடை வளர்ப்போர் அறிந்து கடைபிடிப்பது அவசியம்.

பசுந்தீவனம் மழைக்காலத்தில் மிகுதியாக கிடைக்கும். கால்நடைகள் அதிகம் மழை பெய்த புல்லை உண்பதால் கழிச்சல், செரிமான கோளாறு, புழுக்கள் தாக்கத்தினால் அவதிப்படும். மழைக்காலத்தில் அறுவடை செய்த புல்லை சற்று நேரம் உலர வைத்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.

கால்நடை வளர்ப்பு

கால்நடை வளர்ப்பில் 2 முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று கால்நடைகளை மேய்ச்சலுக்கு மட்டும் அனுப்பி வளர்ப்பது. மற்றொன்று பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு அளித்து வளர்ப்பதாகும். மேய்ச்சல் மட்டும் உடைய கால்நடை வளர்ப்பு முறை தமிழகத்தில் அதிக அளவில் பின்பற்றப்படுகிறது. பசுந்தீவனம் உற்பத்தி செய்து அதனை அளிப்பது அடுத்த வகையாகும்.

மேய்ச்சல் முறையில் உள்ள கால்நடைகள் மழைக்காலத்தில் அதிக புல்லை உட்கொள்வதால் கழிச்சல் நோய் உண்டாகும்.

நீண்ட வறட்சிக்கு பின் மழையில் முளைத்த புற்களை உண்பதால் வயிறு உப்புசம், செரிமான கோளாறு உண்டாகும். எனவே மழைக்காலத்தில் கால்நடைகளை அதிகாலை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்ப்பது நல்லது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கால்நடைகளை மேய்க்க வேண்டும்.

தீவனம் அளித்தல்

பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து, அறுவடை செய்து, அதை வெயிலில் உலர வைத்து, பின் அளிக்க வேண்டும். இதை கால்நடைகள் விரும்பி உண்ணும். மழைக்காலங்களில் கால்நடைகளின் உடலில் தட்பவெப்பம் குறைவாக காணப்படும். ஏனென்றால் வெயில் காலத்தில் நடக்கும் உடல் செயல்பாட்டு தன்மை, மழைக்காலத்தில் முற்றிலும் மாறுபடுகிறது. எனவே பால் உற்பத்தி மற்றும் இறைச்சி உற்பத்திக்கு ஏற்ப அடர் தீவனத்தை அதிகம் அளிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு லிட்டர் பால் உற்பத்திற்கு 500 கிராம் அடர் தீவனமும், 50 கிராம் ஆடுகளின் இறைச்சி உற்பத்திக்கு தினசரி 100 - 150 கிராம் அடர்தீவனமும் அளிக்க வேண்டும். எனவே, மழைக்காலத்தில் அடர்தீவனம் கண்டிப்பாக உற்பத்திக்கு ஏற்ப அளிப்பது அவசியம். 2 வேளைகளாக பிரித்து அடர்தீவனம் அளிப்பது முக்கியம். அதிகாலை மற்றும் இரவு நேரம் தீவனமளித்தலை தவிர்த்து, பகலில் அளிப்பதால், உற்பத்தி திறன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சேமிப்பு முறைகள்

மழைக்காலங்களில் அதிகமாக விளையும் பசுந்தீவனத்தை, பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனமாக மாற்றலாம். பின் வைக்கோல் அல்லது சோள தீவனத்தட்டையை, யூரியா சத்தூட்டிய வைக்கோலாக மாற்றினால், அதன் சத்துகள் அதிகரித்து, தீவனச்செலவு குறையும்.

அடர் தீவனமாக மக்காசோளம், கம்பு, புண்ணாக்கு மற்றும் தவிடு வகைகளை, ஈரம் படாமல் சேமிக்க வேண்டும். தீவன மூட்டைகளை மரக்கட்டைகளில் அடுக்கி வைத்தல் வேண்டும். சுவற்றை ஒட்டி தீவன மூட்டைகளை வைக்கக்கூடாது. தீவன அறைக்குள் காற்று புகாமல் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் அடர்தீவன தயாரிப்பை, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் செய்தல் நல்லது. தானிய வகைகளான மக்காச்சோளம், கம்பு போன்றவை மற்றும் கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு ஆகியவற்றை நன்கு காயவைத்து பின் அரைத்து சேமிக்க வேண்டும்.

பூச்சி மருந்து தெளித்தல்

கால்நடைகளுக்கு மழைக்காலங்களில் சுகாதாரமான தீவனம் அளிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தீவன தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தீவன தொட்டிகளில் மீதமாகும் தீவனத்தை கால்நடைகள் உண்ணவில்லை என்றால், உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். பசுந்தீவனத்தை மழைக்காலத்தில் ஈரம் இல்லாதவாறு உலர்த்தி அளித்தல் வேண்டும்.

பசுந்தீவனத்தை நன்கு உதிர்த்து மண் மற்றும் புழுக்கள், பூச்சிகள் இல்லாதவாறு அளிக்க வேண்டும். மழைக்காலங்களில் கொசுக்கள், உண்ணிகள் மற்றும் புழுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. எனவே தீவனத்தொட்டியை சுற்றியும், கொட்டகையை சுற்றியும், பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தல் மிகவும் அவசியம். தண்ணீர் தொட்டியை வாரம் ஒரு முறை சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடித்தல் வேண்டும். முக்கியமாக பாசி பிடித்தலை தவிர்க்க வேண்டும். இவற்றை கால்நடை வளர்ப்போர் கடைபிடிக்க வேண்டும்.

English Summary: Livestock Feed
Published on: 25 October 2018, 05:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now