Animal Husbandry

Thursday, 21 July 2022 08:33 PM , by: R. Balakrishnan

Livestock Worms

இயற்கை முறையில், குடற்புழு நீக்கம் குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் கால்நடை மருத்துவ பல்கலை உதவிப் பேராசிரியர் முனைவர் ரா.துரைராஜன் சில வழிமுறைகளை கூறினார். இவரின் வழிகாட்டுதல்படி, கறவை மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தால் விரைவில் மாடுகள் குணமடையும்.

குடற்புழுக்கள் (Worms)

அக ஒட்டுண்ணிகள் என அழைக்கப்படும் குடற்புழுக்கள் இளங்கன்றுகளை தாக்கும். குறிப்பாக, 'ஆம்பிஸ்டோமியாஸிஸ்' என்னும் நோயால் புழுக்கள் வளர்ந்து, சிறு குடலை சேதப்படுத்தும். இதுபோன்ற நேரங்களில், போதி மற்றும் உடற்சோர்வு ஏற்படும். கீழ்தாடை வீக்கம் ஏற்படுத்தும்.

இதுதவிர, கறவை மாடுகளுக்கு 'சிஸ்டஸோமியாஸிஸ்' என்கிற நோயால், மாடுகளின் மூக்கிற்குள் சதை வளர்ந்து, மாடு மூச்சு விட சிரமப்படுவதோடு, இறக்கவும் நேரிடும். இதை கட்டுப் படுத்துவதற்கு, மூலிகை மருத்துவத்தில் வழியுண்டு.

மூலிகை வைத்தியம் (Herbal Remedy)

15 கிராம் சீரகம்; 10 கிராம் மஞ்சள்; 5 பூண்டு பல்; 5 மிளகு; ஒரு கை பிடி தும்பை இலை; ஒரு கைபிடி வேப்பிலை; 100 கிராம் வாழை தண்டு சாறு; 50 கிராம் பாகற்காய்; 150 கிராம் பனை வெல்லம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், சீரகம், கடுகு, மிளகு, பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய அனைத்தையும் சேர்த்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, உப்புடன் தொட்டு, நாக்கின் மீது தேய்க்க வேண்டும்.

ஒரு வேளை வயிற்றுக்குள் உணவாக கொடுக்க வேண்டும். இதுபோல செய்தால், குடற்புழு நீக்கத்தை எளிதாக கட்டுப்படுத்தலாம். நோய் தாக்கம் அதிகமாக இருந்தால், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவரை நாடலாம் என அவர் கூறினார்.

தொடர்பு கொள்ள
ரா.துரைராஜ்
80981 22345.

மேலும் படிக்க

பசு கோமியத்தை வாங்கும் மாநில அரசு: கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி!

கடைமடைக்கு காவிரி நீர் வந்து சேரவில்லை: விவசாயிகள் கவலை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)