தீவிரமாக பரவி வரும் அம்மை நோயை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர், கோவை மாவட்டத்தில் விவசாய தொழிலுடன் கால்நடை வளர்ப்பு (Livestock) தொழிலும் பிரதானமாக உள்ளது. இதனை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள், கால்நடைகளுக்கு ஏற்படும் அம்மை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வழியின்றி திணறி வருகின்றனர்.
விவசாயிகள் கூறியது
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டுமே கால்நடைகளை தாக்கும் அம்மை நோய் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற் போது அனைத்து பகுதியிலும் பரவுகிறது. இதனால், கால்நடைகள் மிக கடுமையாக பாதிக்கப்படுகின்றன. கொப்புளம், தோலில் புண்கள் ஏற்பட்டு, சீழ், ரத்தம் வடிதல் ஆகியவற்றால் கால்நடைகள் மிகவும் சோர்வடைந்து, சாப்பிட இயலாத நிலைக்கு தள்ளப்படுகின்றன. கடந்த வாரம் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடை ஒன்றின் மூலம் ஆறு கால்நடைகளுக்கு நோய் பரவியது. இதில், கன்றுக்குட்டி ஒன்று ஆறாத புண்களால் அவதிப்பட்டு இறந்தது.
சிகிச்சை
சிகிச்சைக்காக தடுப்பூசி (Vaccine), மருந்து என, செலவு செய்தும் பயனில்லை. எலுமிச்சை, வெற்றிலை, மஞ்சள் (turmeric) என நாட்டு மருந்துகளையும் பயன்படுத்தினோம்.இருந்தும், நோயின் தாக்கம் குறையவில்லை. எனவே, அம்மை நோயை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க