பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 May, 2021 9:22 AM IST
Credit : Facebook

கறவை மாடு, இலவசக் கோழி வழங்கல், இலவசக் கொட்டகை அமைத்தல் என கால்நடைகள் சார்ந்த பல்வேறு திட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில் பல நூறு கோடி ரூபாய் அளவில் மெகா ஊழல் நடந்துள்ளது. பயனாளிகளைப் பல வகைகளில் ஏமாற்றி, லாபம் பார்த்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என தமிழகமே எதிர்பார்க்கிறது.

இலவச கறவைப்பசுக்கள் (Free dairy cows)

கிராமப்புற பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் கால்நடைத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த துறையின் மூலம் இலவச கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்படி விதவைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், ஊனமுற்றோருக்கும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழைகளுக்கும் 5 ஆடுகள் அல்லது 25 கோழிக் குஞ்சுகள் அல்லது ஒரு பசுமாடு, ஒரு கன்றுக்குட்டி வழங்க வேண்டும்.

கறவை மாடுகள் (Dairy cows)

தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் 2018 வரை 21 மாவட்டங்களில் இலவச கறவை பசுக்கள் வழங்கப்பட்டன. இந்தத்திட்டம், 2018-19ம் ஆண்டில் 9 பிற மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2011 முதல் 2021 வரை ரூ.370 கோடி மதிப்பில் 1,11,379 பயனாளிகளுக்குப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தான் அதிகாரிகள் துணையுடன் அரசு பெரிய மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

மெகா மோசடி (Mega fraud)

அடிமாடுகள், 5 வயதுக்கு மேற்பட்ட மாடுகள், தமிழகச் சூழலுக்கு பழக்கப்படாத மாடுகள் மற்றும் பால் வற்றிய மாடுகளை மிகக் குறைந்த விலைக்கு கொடுத்து வாங்கி பயனாளிகளுக்கு 40 ஆயிரத்திற்கு விற்பனை செய்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

வசதியானவர்கள், வயதானவர்கள் தேர்வு (Choose the comfortable, the elderly)

2011 முதல் 2015 வரை இந்த திட்டத்தில் பயன் பெற்றவர்களாக காட்டப்பட்டவர்களில் பல ஆயிரம் பேருக்கு எழுந்து நடக்க முடியாத நிலையில் 60 வயதை கடந்த நபர்களை சேர்த்துள்ளனர். கணக்குத் தணிக்கை அறிக்கையில், கடந்த 2011 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 75448 பேருக்கு ரூ.274 கோடியில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வித விதமாக மோசடி (Fraud in various ways)

வேலூர் மாவட்டத்துக்கு ஆந்திராவில் உள்ள புங்கனூர், கொத்தூர், வேதமூர் உட்பட சித்தூர், கடப்பா மாவட்டங்களில் உள்ள மாட்டு சந்தைகளில் கறவை மாடுகளை வாங்கியுள்ளனர்.
ஒரே வீட்டில் 3 பேருக்கு இலவச ஆடு, மாடுகள் அளிக்கப்பட்டன.

காப்பீடும் இல்லை (No insurance)

கடந்த 2011-13ல் 950 பசுக்களில் 329 பசுக்கள் ஐந்து வயதுக்கு மேற்பட்டவை. இதனால், அவை வாங்கிய சில நாட்களிலேயே இறந்துவிட்டன. பசு மாடுகள் இறக்க நேரிட்டால் பதிலுக்கு வேறு பசு அளித்திட மாடுகளுக்குக் காப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், 5 மாவட்டங்களில் நிகழ்ந்த 453 இறப்புகளில் 103 கறவை மாடுகள் மட்டுமே மாற்றி அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் காப்பீடு வழங்கவில்லை.

மலட்டு மாடுகள் (Sterile cows)

கால்நடைத்துறை செய்த ஆய்வில், 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 441 கறவை மாடுகள் மடிவற்றிய மலட்டு மாடுகள். இதனால் ஏழை பெண்களின் பொருளாதாரம் உயராமல் கடனாளியாக மாற்றிவிட்டது.

வாடகைக்கு எடுத்து (Rent)

வெள்ளாடு/ செம்மறியாடுகளில் மூன்று ஆடுகள் பெட்டையாகவும், ஒரு ஆடு கிடாவாகவும் வழங்கப்படுகின்றன. ஆடுகளைப் பயனாளிகளே கொள்முதல் செய்யும் திட்டத்தில், 2001 முதல் 2020 வரை ரூ.1480 கோடியில் 11 லட்சம் பெண்களுக்கு 46 லட்சத்து 70 ஆயிரத்து 696 வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இதில் கூலிக்கு மேய்ப்பவர்களை ஆடு முன் நிறுத்த பயனாளிகளாக காட்டி சில நூறு கோடி சுருட்டப்பட்டது.

இன்னும் சில இடங்களில் வாடகைக்கு ஆட்டை வாங்கி போட்டோ எடுத்து, ஏழைகளையும், ஏமாற்றியதுடன் பணத்தையும் சுருட்டி உள்ளனர். இதற்காக ஆடுகளுக்கு 100ம், மனிதர்களுக்கு ரூ.2000மும் அளிக்கப்பட்டுள்ளது.

கொட்டகையிலும் முறைகேடு (Shed abuse)

கால்நடை கொட்டகை அமைப்பதில் அரசு மானியம் வழங்குகிறது. இதில் 2 மாடுகள் இருந்தால் 53 ஆயிரம், 5 மாடுகளுக்கு 81ஆயிரம், 10 மாடுகளுக்கு 1 லட்சம், 20 ஆடுகள் இருந்தால் 1.40லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 3ஆயிரம் கொட்டகை அமைக்க, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கொட்டகை அமைக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் கண்துடைப்புக்காக கொட்டகை அமைத்திருந்தனர்.

கோழிக் குஞ்சுகளிலும் போலி (Fake in chickens)

அசில் இன நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 வார வயதுடைய 60 லட்சம் அசில் இனக்கோழிகள் 2.4 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பயனாளிகளுக்கு 25 கோழிகள் வீதம் வழங்கப்பட்டு இருப்பதாக அரசு கூறியுள்ளது. ஆனால், அசில் ரக நாட்டுக் கோழிகள் பற்றாக்குறை காரணமாக பண்ணை கோழிக்குஞ்சுகளை கால்நடைத்துறை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பல ஆயிரம் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கியதாக ஆளுங்கட்சியினரை நிற்க வைத்துக் கொள்ளை அடித்துள்ளனர்.

மூடி கிடக்கும் மருந்தகங்கள் (Closed pharmacies)

தமிழகம் முழுவதும் 2,556 கால்நடை மருந்தகங்கள் செயல்படுகின்றன. கால்நடை மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளை அந்தந்த மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளே வாங்கிக் கொள்ளலாம். வாங்கிய மருந்துக்கான பில்லை மட்டும் மருத்துவ பணிக்கழகத்துக்கு அனுப்பி வைத்தால் போதும். இங்கு தான் ஊழல் ஆரம்பித்தது.

மருந்துகளை கொள்முதல் செய்ய அதிகாரம் பெற்ற மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள், போலி பில்கள் (Bills)மூலம் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர். அதாவது மாடுகளுக்கான இலவச மருந்துகளையும் நிறுத்திவிட்டு, வெறும் பில்கள் மட்டும் தயார் செய்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

மாடு மிக்சரிலும் ஊழல் (Corruption in the cow mixer)

மாடுகளுக்கு மினரல் மிக்சர் என்ற ஊட்டச்சத்து கலவை வழங்காமல் வழங்கியதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும் ஆந்த்ராக்ஸ், கோமாரி நோய்களைத் தடுக்கும் தடுப்பூசிகளை குறைந்த அளவில் வாங்கி அதிக மாடுகள் பாதிக்கப்பட்டதாக கணக்குக்காட்டி, அதற்காக கூடுதலாக மருந்து வாங்கியதாகக்கூறியும், கொள்ளை அடித்துள்ளனர்.

பல நூறுக் கோடி மோசடி (Hundreds of crores of fraud)

இந்த மோசடியில் மாவட்ட அளவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றி கொள்ளைடியத்துள்ளனர். மாநில அளவில் இது பல நூறுக் கோடிகளைத் தாண்டும்.

விவசாயிகள் எதிர்பார்ப்பு (Farmers expect)

இப்படி வாய் இல்லாத ஜீவன்களின் உயிர்காக்கும் தடுப்பூசிகள், மருந்துகள், சத்து பவுடர்கள் என அனைத்திலும் ஆட்சியாளர்கள் கருணையே இல்லாமல் கொள்ளை அடித்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் திமுக அரசு இந்த ஊழல்களை விசாரித்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருமா என கால்நடை விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க...

சினை ஆடுகளுக்கானத் தீவன மேலாண்மை!

கோழிகளுக்கு வெப்ப அயற்சியைத் தடுக்க குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும்! ஆராய்ச்சி நிலையம் தகவல்

பால் பண்ணை அமைக்க ரூ.1.75 லட்சம் மானியம்- மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!!

English Summary: Mega scandal over supply of dairy cow, Asil breed chicken - multi-crore roll in drug purchases!
Published on: 17 May 2021, 09:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now