பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 March, 2021 10:41 AM IST
Credit : agritech

பால் கறக்கும் பணியை எளிதாக்கும் வகையில் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள பால் கறக்கும் நவீன இயந்திரத்திற்குக் கிராமப்புற விவசாயிகளிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்பு (15 years ago)

ஒரு கறவை மாடு இருந்தால் ஒரு குடும்பம் பிழைத்துக் கொள்ளலாம் என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள். மாடு வளர்ப்போர் கடந்த 15 ஆண்டுக்கு முன் மாடுகளைப் பராமரிக்கவும், பால் கறக்கவும் பண்னை ஆட்களை நியமித்து இருந்தனர்.

பால் கறப்பது என்பது சற்று சிரமமான காரியம். அதனால்தான் ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டைப் பாடியும் பால் கறக்க வேண்டும் எனறு கூறுவார்கள்.

 2 மாடு கூட இல்லை (Not even 2 cows)

நாகரிக வளர்ச்சி, வெளிநாட்டு வேலை மோகம் ஆகிய காரணத்தால் இத்தொழிலில் ஈடுபடுவதை ஏராளமான கிராமவாசிகள் கவுரவ குறைச்சலாக கருதி வருகின்றனர். அதன் விளைவாக 20 மாடுகள் வரை இருந்த ஒரு விவசாயி விட்டில் தற்போது ஒன்று இரண்டு மாட்டை பார்ப்பதே அரிதாக உள்ளது.

கிராமப்புறங்களில் மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு இது சாத்தியமில்லை . பால் கறக்க ஆள் கிடைக்காததால் மாடு வளர்ப்பதை ஏராளமான விவசாயிகள் நிறுத்தி விட்டனர்.
வீட்டு உபயோகத்துக்கு மட்டும் ஒன்றிரண்டு மாடுகள் வைத்துள்ளனர்.

இத்தகைய இக்கட்டான இந்நிலையில், விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் குறைந்த விலையில் 14 ஆயிரத்துக்கு பால் கறக்கும் இயந்திரம் விற்பனைக்கு வந்துள்ளது.

சிறப்பு அம்சம் (Special feature)

  • மின்சாரம் மற்றும் கையால் இயக்கப்படும் இந்த இயந்திரத்தில் பால் கறக்க ஒரு மாட்டிற்கு மூன்று நிமிடங்கள்தான் ஆகும்.

  • இயந்திரம் இயங்க துவங்கியவுடன் கம்பரஸரில் இருந்து வரும் காற்று டேங்கில் நிரம்பும்.

  • டேங்கில் இருந்து டியூப் வழியாக செல்லும் காற்று, மாட்டின் காம்பில் பொருத்தப்பட்டுள்ள கறவை செட் குழாய்க்கு சென்று அங்கிருந்து ஏர் இழுவைத் திறன் மூலம் பால கால் சுரக்கும் பாலைக் கறந்துவிடும்.

  • அவ்வாறு கறந்தப் பாலை சேகரிக்க இயந்திரத்தில் 20லிட்டர் கேன் பொருத்தப்பட்டுள்ளது.

    ஒரு இயந்திரத்தில் 300லிட்டர் பால் கறக்க முடியும்.

  • ஒரே நேரத்தில் இரண்டு மாடுகளுக்கு பால் கறக்கும் இயந்திரமும் உள்ளது.

ஆள் பற்றாக்குறையைத் தவிர்க்க (To avoid manpower shortage)

தற்போது ஆள் பற்றாக்குறையைத் தவிர்க்க நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாடு வளப்போர் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த சிறிய நவீன கறவை இயந்திரத்திற்கு மாறி வருகின்றனர். இந்த இயந்திரம் குறித்து கால்நடை விவசாயி தனலட்சுமி கூறுகையில்,
இங்குள்ள கிராமங்களில் பால் கறக்க லிட்டருக்கு 3 ரூபாய் கொடுக்க முன்வந்தபோதிலும், ஆள் கிடைப்பதில்லை.

நல்ல பலன் (Good benefit)

அதனால் மாடு வளர்க்கும் தொழில் நலிவடையும் நிலையில் இருந்தது. இதற்கு மாற்றாகக் குறைந்த விலையில் வந்துள்ள கறவை இயந்திரம், நல்ல பலன் தருகிறது. இயந்திரத்தில் பால் கறக்க மாடுகளைப் பழக்கப்படுத்த ஒரு வாரம் ஆகிறது.இதன்பின் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களிடம் உள்ள 10க்கும் மேற்பட்ட மாடுகளிடம், இயந்திரம் மூலமே காலை மற்றும் மாலை வேளைகளில் பால் கறக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

சுட்டெரிக்கும் சூரியன்- கால்நடைகளைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் தேவை!

பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?

கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!

English Summary: Modern machine that makes milking work easier!
Published on: 13 March 2021, 10:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now